பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காரக்குழம்பு கனி.. அள்ளிக்கொடுத்த சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டு 35 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கனி வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதை அடுத்து, இந்த சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, பிரவீன், துஷார், கலையரசன், சபரி, திவாகர், விஜே பாரவ்தி, கனி, எஃப் ஜே, அரோரா, ரம்யா ஜோ, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், கெமி, வியானா, சுபிக்‌ஷா, கம்ருதீன், நந்தினி என 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினார்கள். அதன் பின் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நால்வரும் முன்னர் உள்ளே சென்றனர். உள்ளே இருப்பவர்கள் எல்லாம் ஒன்னும் செய்யவில்லை, நாங்கள் ஆட்டத்தையே மாற்றுவோம் என சொல்லி உள்ளே சென்றார்கள். ஆனால், அவர்கள் பெரிதா விளையாடவில்லை.

Bigg Boss Kani evicted
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 8: பிக் பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாவது நாளே உடல்நிலை சரியில்லாததால் நந்தினி பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின், பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று கனி வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கனி பிக் பாஸ் வீட்டில் பெரியதாக எதுவும் செய்யாமல் சமையல் செய்து அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி கனி வெளியேறி உள்ளார். இந்த வாரம் வீட்டை விட்டு அரோரா வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தப்பித்துள்ளார்.

கனியின் சம்பளம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கனி கலந்து கொண்டதற்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில்,தற்போது அவர் 40 நாட்கள் இருந்துள்ளதால், அவருக்கு தனி 40 நாட்கள் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளதால், அவரின் மொத்தம் அவர் 4 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X