12வது தோல்வி.. நின்றுபோன திருமணம்.. பிக் பாஸ் திவ்யாவின் கண்ணீர் கதை!
சென்னை : பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக இருக்கிறார் நடிகை திவ்யா கணேஷ். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது பலரும், எதுக்காக இந்த பொண்ணு இப்படி ரூடா நடந்துக்குது, ஓவர் ஆட்டிட்யூட் என பலரின் வெறுப்பை திவ்யா பெற்றார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரச்சனைகளை தெரிந்த பிறகு தான், திவ்யா அப்படி இல்ல, மற்றவர்களால் வாழ்க்கையை வெறுத்து இப்படி மாறி இருக்கிறார் என்பதை அனைவரும் தெரிந்து கொண்டனர். அப்படி திவ்யா சந்தித்த பிரச்சனை என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராமநாதபுரத்தில் பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவருக்கு மூத்தவர்கள் இரண்டு அண்ணன், இரண்டு அக்கா என பெரிய குடும்பத்தில் பிறந்த திவ்யா கணேஷுக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் படிப்பில் கெட்டியாக இருந்த போதும், திவ்யா கணேஷ் படிப்பில் படுமக்காக இருந்திருக்கிறார். இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவருக்கு இருந்துள்ளது.

நடிகை திவ்யா கணேஷ்: வழக்கறிஞராக வேண்டும், நீதிபதிபயாக வேண்டும் என ஆசை இருந்தாலும் 12 ஆம் வகுப்பில், இரண்டு சப்ஜெக்டில் தோல்வி அடைந்ததால் ஒட்டுமொத்த குடும்பமும், அக்கம் பக்கத்தினரும் திவ்யா எதற்கும் லாயக்கில்லை என வன்மத்தை கக்கி உள்ளனர். யார் என்ன சொன்னாலும் மனம் தளராமல் இருந்த திவ்யா, மறுபடியும் படித்து தேர்வு எழுதி 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து சென்னையில் படிப்பை தொடர வேண்டும் திவ்யா ஆசைப்பட பெற்றோர் சென்னைக்கு வர அனுமதிக்காததால், ராமநாதபுரத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் படித்துள்ளார்.
விஸ்காமில் சேர்ந்தார்: அப்போது தான் திவ்யாவிற்கு சென்னைக்கு வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதாவது திவ்யாவின் இரண்டாவது அக்கா கர்ப்பமாக இருக்க அவரை பார்த்துக் கொள்வதற்காக திவ்யா சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தான், விஸ்காம் படிப்பு பற்றி திவ்யாவிற்கு தெரியவர, அது பற்றி பலரிடம் கேட்டு தெரிந்து விஸ்காமில் சேர்ந்து படித்துள்ளார். அதன் மூலமாகங்ததான் குறும்படம் ஒன்றில் முதன்முதலாக திவ்யா நடித்துள்ளார்.

சீரியல் என்ட்ரி: அதன் பின், பல கட்டம் முயற்சிகளுக்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக பிரியமானவளே சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் அடுத்த சீரியலில் நடித்து வந்த போது தான், இவர் நடித்து வந்த சீரியலில் பிரச்சனை ஏற்பட்டு, ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சீரியலில் இருந்து வெளியேறினார். பின் மனம் நொந்து போன திவ்யா இனிமேல் சீரியலே வேண்டாம் என நினைத்த போது தான் அவருக்கு, மீண்டும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் திவ்யா.
நின்று போன நிச்சயம்: சீரியலில் பல பிரச்சனைகளை தாண்டி முட்டி மோதி, முன்னேறி வந்த திவ்யா தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய சரிவை சந்தித்தார். நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கேசுரேஷ் உடன் நிச்சயதார்த்தம் நடந்து, அனைத்து மீடியாக்கள் முன்னிலையில் இவர் தான் கணவர் என அறிவித்த பிறகு திவ்யாவிற்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நிற்கு போனது. திருமணம் நின்று போனதற்கு இவர் தான் காரணம் என பலர் குற்றம் சாட்ட அந்த மன அழுத்தத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த திவ்யா இப்போது, பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சிறப்பாக விளையாடி வருகிறார். டைட்டில் வின்னராக அனைத்து தகுதியில் இவருக்கு இருக்கு என இணையத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











