தனுஷ் மாதிரிதான் விஜே பார்வதியும்.. பக்கத்தில் போனால் அவ்வளவுதான்.. ரெட் கார்டு விஷயத்தில் சுசித்ரா செம அடி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் சான்ட்ராவை எட்டி உதைத்த விஜே பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார்கள். இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்ததை நினைத்து ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி இந்த விஷயம் குறித்து இன்ஸ்டாகிராமில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் சில நாட்களுக்கு முன்பு ஒன்பது போட்டியாளர்களுக்கு டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது காரில் பார்வதி, கம்ருதீன் பக்கத்தில் சான்ட்ரா அமர்ந்திருந்தார். தனது மனதுக்குள் வன்மத்தை வளர்த்திருந்த் பார்வதி சான்ட்ராவை உதைத்து கீழே தள்ளினார். அதற்கு கம்ருதீனும் உதவி செய்தார். இரண்டு பேரின் அராஜக செயல் காரணமாக காரிலிருந்து கீழே விழுந்த அவருக்கு பேனிக் அட்டாக்கும் வந்தது.

விரைந்த மருத்துவ குழு: அவருக்கு வந்த உடல்நல பிரச்னையை பார்த்து பதறிய கானா வினோத், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் ஆகியோர் தங்களால் ஆன முதலுதவியை செய்தார்கள். இருந்தாலும் உடல்நிலை சரியாகாத காரணத்தால்; மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரது உடல்நலத்தை தேற்றினார்கள். நல்வாய்ப்பாக பெரிய பிரச்னை எதுவும் இல்லை. உடல்நலம் சரியானாலும்; அந்த பதற்றம் அவருக்குள் இருந்ததால் பாரு, கம்ருதீனை பார்த்தாலே பயந்து ஓடி ஒளிந்தார்.

Bigg Boss Tamil Season 9 VJ Parvathi Kamrudin Evicted With Red Card Suchitra Slams Them
Photo Credit:

அதிரடியாக கொடுக்கபட்ட ரெட் கார்டு: இரண்டு பேரும் செய்த அராஜக செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். நிகழ்ச்சி குழுவினரும், தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் அதிரடியாக அந்த இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள். இது அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

மொத்தமாய் முடித்துவிட்ட பிக்பாஸ்: ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் 90 நாட்கள் அந்த வீட்டுக்குள் இருந்ததற்கான சம்பளம் கொடுக்கப்படாது என்று கூறப்படுகிறது. மேலும் கம்ருதீன் நடித்துக்கொண்டிருந்த சீரியலிலிருந்தும் அவர் தூக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன. வீட்டிலிருந்து வெளியேறியபோது அவ்விரண்டு பேரும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனாலும் அவர்களது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் சான்ட்ரா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் இல்லை.

சுசித்ரா வீடியோ: இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இதுகுறித்து பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "ஹாய். காலையில் 5.30 மணிக்கு எழுந்து இந்த வீடியோவை ஷூட் செய்கிறேன். பார்வதி ஒரு சுயநலவாதி (நார்சிஸிஸ்ட்). அவர்களது தாக்கம் எப்போ அதிகம் இருக்கும் என்றால் அவர்கள் ரொம்பவே அருகில் இருந்தால்தான். அவர்கள் ஒரு காந்தம் மாதிரி. மற்றவர்கள் எல்லாம் இரும்பு துண்டு மாதிரி. கொஞ்சம் தூரமாக இருந்தால் அவர்களது தாக்கம் மற்றவர்களிடம் இருக்காது. அவர்களை நெருங்கிவிட்டால் நாமும் அவர்கள் மாதிரி மாறிட வேண்டியதுதான். வெளியே இருந்து யாராவது பிய்த்தால்தான் கழன்றுகொள்ள முடியும். இல்லையென்றால் அன்யோன்யமாக இருந்துவிடும்.

அதனால் அந்த நார்சிஸிஸ்ட்டுகளிடமிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்றால் அவர்களிடமிருந்து தூரமாக இருக்க வேண்டியதுதான். கார்த்திக் குமார், தனுஷ் உள்ளிட்டோருக்கு அடுத்து இவர்கள்தான். இவர்களை சமாளிக்கவெல்லாம் முடியாது. சமாளிக்காமல் இருப்பதுதான் ஒரே வழி. அவர்களிடம் க்ளோஸ் ஆகக்கூடாது. அவர்களிடம் நெருக்கமாவதற்கே சிலர் விதிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது பார்வதிக்கு கம்ருதீன் விதிக்கப்பட்டது மாதிரி. கம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே அவர்களுக்கு விதிக்கப்பட்டவர்கள் அவர்களோடு ஒட்டட்டும். அன்யோன்யமாக இருக்கட்டும். வாழட்டும், சாகட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X