Bigg Boss Tamil 9 - ஓன கிழவி பார்வதி வாய மூடுடி..மூஞ்சிலேயே வாந்தி எடுப்பேன்..விஜே பாருவை வெளுத்த திவ்யா கணேஷ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை 15 பேர் எவிக்ட் ஆகியிருக்க; மீதம் இருக்கும் ஒன்பது பேர் போட்டியில் விளையாடிவருகிறார்கள். Ticket To Grand Finale டாஸ்க்கில் வென்று அரோரா இறுதி சுற்றுக்கு சென்ற முதல் போட்டியாளராகியிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க; இந்த டாஸ்க்கில் காரிலிருந்து சான்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைத்த சம்பவம் கடும் கண்டத்தை பெற்றிருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 90 நாட்கள் நிகழ்ச்சி நடந்திருக்கும் நிலையில்; கலந்துகொண்ட 24 போட்டியாளர்களில் 15 பேர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது விஜே பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், கானா வினோத், சபரிநாதன், திவ்யா கணேஷ், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா ஆகியோர் இருக்கிறார்கள். எப்படியாவது டைட்டிலை அடித்துவிட வேண்டும் என அனைவருமே முயற்சிக்கிறார்கள்.
எல்லை மீறிய பார்வதி: சூழல் இப்படி இருக்க TTF எனப்படும் Ticket To Finale டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது காரிலிருந்த சான்ட்ராவை விஜே பார்வதி எட்டி உதைக்க; அதற்கு கம்ருதீனும் உதவி செய்தார். பாரு உதைத்ததால் கீழே விழுந்த சான்ட்ராவுக்கு வலிப்பும் வந்தது. உடனடியாக விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், சபரி ஆகியோர் முதலுதவி செய்தார்கள்.மேலும் மருத்துவ குழு வந்து அவருக்கு சிகிச்சையும் அளித்தது.

நார்மலான சான்ட்ரா: இந்த சம்பவம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும்; எல்லை மீறி நடக்கிறார்கள். இதிலும் விஜய் சேதுபதி தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்; அவர் சுத்த வேஸ்ட் என கொந்தளித்துவருகிறார்கள். இதற்கிடையே சான்ட்ரா இப்போது உடல்நலம் தேறியிருப்பதாக பிக்பாஸ் தெரிவித்திருக்கிறார்.
வெளுத்துவிட்ட திவ்யா கணேஷ்: சான்ட்ராவை உதைத்ததை பார்த்து கம்ருதீனை தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் கொதித்தாலும்; திவ்யா கணேஷ் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அவர் கம்ருதீனிடம், 'நீ இந்த ஷோ முடித்துவிட்டு டிவியில் சென்று பார். உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே இந்த ஓன கிழவி பார்வதி; இவள் உன்னை பற்றி இங்கு மற்றவர்களிடம் என்னென்ன பேசியிருக்கிறாள் என்பதை பார்த்துவிட்டு எனக்கு நீ ஃபோன் செய்ய வேண்டும்' என்று கூறினார். உடனே இதில் குறுக்கிட முயன்றார் பார்வதி.
மூஞ்சில வாந்தி எடுத்திடுவேன்: அதற்கும் பதிலடி தந்த திவ்யா, 'ஓன கிழவி நான் உன்னிடம் பேசல டி. இதெல்லாம் கேமா. உன் அம்மா வந்து உனக்கு கிளாஸ் எடுத்துமே நீ திருந்தவில்லை. நான் சொல்லியா திருந்தப்போறேன். உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. பார்த்தாலே வாந்தி வருது' என கூற; அதற்கு பாருவோ சரி எடு என கூறினார். அதற்கு பதிலளித்த திவ்யா, 'ஏற்கனவே உன் மூஞ்சி வாந்தி எடுத்த மாதிரிதான் டி இருக்கு' என வெளுத்துவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், 'பார்வதியை எல்லாம் இப்படித்தான் டீல் செய்ய வேண்டும். அவருக்கு சரியான பூசாரி திவ்யாதான்' என பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











