Bigg Boss Tamil 9 - பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்.. ரன்னர் யார்?.. எதிர்பார்த்தது நடந்துடுச்சு
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இறுதிச்சுற்று நடைபெற்றது. இறுதியாக திவ்யா கணேஷ், அரோரா, சபரி, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் இருந்தார்கள். அவர்களில் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனையொட்டி அவருக்கு சோஷியல் மீடியாவில் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. மொத்தம் 20 பேர் கலந்துகொண்டதுடன் போட்டி தொடங்கியது. இந்த முறை திரைத்துறை பிரபலங்கள் அதிகம் இல்லாமல்; சோஷியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம் பேர் கலந்துகொண்டார்கள். இவர்களால் போட்டிக்கு எந்த கன்டென்ட்டும் கிடைக்காது என பேச்சுக்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்கள்.
பரபரப்பான போட்டி: ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார்கள். இவர்களும் போட்டிக்குள் வந்த பிறகு பிக்பாஸ் 9 மேற்கொண்டு சூடுபிடித்தது. வாரா வாரம் போட்டியாளர்கள் பலர் எவிக்ட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார்கள். அப்படிப்பட்ட நிலைமையில்தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்தது.

என்ன ட்விஸ்ட்?: அதாவது இந்த சீசனில் விஜே பார்வதி அல்லது கம்ருதீன் ஆகியோரில் ஒருவர் டைட்டிலை வெல்வார்கள் என பலரால் கணிக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே ரவுண்டில் சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்ததால் விஜே பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள். பிக்பாஸ் வரலாற்றிலேயே இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் ரெட் கார்டு பெற்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கானா வினோத்தும் வெளியேறினார்: பாருவும், கம்ருதீனும் வெளியே போன பிறகு திவ்யா கணேஷ், சபரி, அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சபரி, கானா வினோத், சாண்ட்ரா உள்ளிட்டோர் உள்ளே இருந்தார்கள். அவர்களில் கானா வினோத்தோ பண பெட்டியை எடுத்துக்கொண்டு விடைபெற்றுக்கொண்டார். அவரும் டைட்டில் வின்னர் ஆவார் என கணிக்கப்பட்டவர்களில் ஒருவர். தொடர்ந்து சாண்ட்ராவும் வெளியேற திவ்யா கணேஷ், சபரி, அரோரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் இறுதி சுற்றுக்கு சென்றார்கள்.
டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்: இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. அப்போது நான்காவது இடத்தை விக்கல்ஸ் விக்ரமும், மூன்றாவது இடத்தை அரோராவும் பிடித்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இரண்டாவது இடத்தை சபரிநாதனும், முதல் இடத்தை பெற்று டைட்டில் வின்னராக திவ்யா கணேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மக்கள் செலுத்திய வாக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்து: இன்று தொலைக்காட்சியில் இறுதி சுற்று ஒளிபரப்பப்படும். திவ்யா வென்றுவிட்டார் என தகவல் வெளியானவுடன் பலரும் அவருக்கு தங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்ததற்காக பார்வதி, கம்ருதீனிடம் திவ்யா கணேஷ் நடந்துகொண்ட விதத்திலேயே பல மக்களின் மனதில் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டார். எனவே அவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என பலரும் கணித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வெல்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஏழாவது சீசனில் அர்ச்சனா வென்றது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











