பழிதீர்த்த தனலட்சுமி..கதறி அழுத ஜனனி..உண்மையில் யாரு விஷபாட்டில்?
சென்னை : பிக் பாஸ் சீசன்6 இரண்டாவது வாரம் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனின் முதல் தலைவராக ஜிபி முத்து பொறுப்பேற்றுள்ளார்.
மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக ஜிபிமுத்து இருப்பதால், இந்த சீசனின் வலுவான போட்டியாளராக அவர் இருக்கிறார்.
நேற்றைய எபிசோடில் டான்ஸ் மாரத்தான், ஒரு கதை சொல்லட்டுமா? டாக்ஸ் என சற்று விறுவிறுப்பாக இருந்தது.

டான்ஸ் மாரத்தான்
டான்ஸ் மாரத்தான் போட்டியின் முதல் போட்டியாளரான ஜிபி முத்து மற்றும் தினேஷ் இருவரும் ஆடினார்கள். இதில் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடல் போடப்பட்டது. பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாங்கனு பார்த்த இருவரும் அவங்கபாட்டுக்கு ஏதோ ஆடுனாங்க. இருந்தாலும் நம்ம தலைவர் ஜிபி முத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை அள்ளினார்.

ஒரு கதை சொல்லட்டுமா
இதையடுத்து, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுடைய கதையை முழுமையாக சொல்லி முடித்து விட வேண்டும். அப்படி முடித்து விடுபவர்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இடம் பெறமாட்டார்கள். ஆனால்,கதை பிடிக்காமல் போட்டியாளர்கள் ரெட் பட்டனை அழுத்திவிட்டால் கதைசொல்வதை நிறுத்த வேண்டும் அந்த போட்டியாளர் நாமினேஷனில் இடம் பெறுவார்.

தனலட்சுமியின் கதை
இந்த டாஸ்கில் அசீம் கதை சொன்ன போது ரெட் பட்னை அழுத்தியதால், அவர் கதையை சொல்லாமல் பாதியில் வெளியேவந்தார். இதையடுத்து, தனலட்சுமி குடும்ப கஷ்டத்தால் அவதி பட்டதையும், அம்மா துணி வியாபாரம் செய்து தன்னையும் தனது தம்பியையும் வளர்த்ததாக கண்ணீர் மல்க கூறினார். இவருடைய கதையை அனைவரும் அமைதியாக கேட்டனர். இதனால், இந்த வார நாமினேஷனில் இருந்து இவர் தப்பித்தார்.

கண்டித்த ஜிபி முத்து
அடுத்தாக ஜனனி தனது கதை சொல்ல இருந்த நிலையில், தனலட்சுமி ஆயிஷாவிடம் ஜனனி கதை சொல்லும் போது ரெட் பட்டனை அழுத்திவிடுவேன் என்றார். இதை கேட்டு டென்ஷனான மணி எது எப்படி கதையை கேட்காமேலே நீ பட்டனை அழுத்துவா என்று அவரிடம் சண்டை போட்டார். இதையடுத்து, ஜிபிமுத்து அங்கு வந்து, தனலட்சுமியிடம் உனக்கு இங்கே என்ன வேலை என கேட்டு திட்டி அனுப்பினார்.

நாமினேஷனில் ஜனனி
இதையடுத்து, ஜனனி தனது கதையை சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது குடும்ப வறுமையால் சிறுவயதிலேயே குடும்பத்தை கவனிக்க வேண்டியதாகி விட்டது. இதனால், டிவியில் நிகழ்ச்சிகளை என சொல்லிக்கொண்டிருந்த போதே தனலட்சுமி ஓடிவந்து ரெட்பட்டனை அழுத்தினார். இதனால், ஜனனி இந்த வாரம் நாமினேஷனில் வந்துள்ளார்.

யாரு விஷபாட்டில்
ஜிபிமுத்துவிடம் தனலட்சுமி சண்டை போட்டபோது, ஜனனியிடம் இது ஒன்றும் ரீல்ஸ் இல்லை பிக்பாஸ் வீடு என்று கூறி அவரை ஸ்வாஸ் செய்தார். இதனால், சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தனலட்சுமி, ஜனனியை கதை சொல்லவிடாமல் தடுத்துவிட்டார். வீட்டில் யாரும் கதை கேட்க விரும்பாதை நினைத்து ஜனனி கதறி கதறி அழுதார் அவருக்கு ராம் ஆறுதல் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜனனிதான் விஷபாட்டில் என்று பார்த்தார் உண்மையில் தனலட்சுமிதான் விஷபாட்டில் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றர்.


Click it and Unblock the Notifications











