ச்சீ..என்ன இதெல்லாம்..அசல் கோலாரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நிவாஷினி!
சென்னை : அசல் கோலாரை கட்டிப்பிடித்து நிவாஷினி முத்தம் கொடுத்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 2 வாரம் முடிவடைந்துள்ளது. ஜி.பி.முத்து, மெட்டி ஒலி சாந்தி ஆகியோர் கடந்த வாரம் வெளியேறினர். வலுவான போட்டியாளரான ஜிபிமுத்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டில், அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவாஷினி, தனலட்சுமி என 19 போட்டியாளர்கள் உள்ளனர்.

சில்மிஷ மன்னன்
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே ஆயிஷாவிடம் போடா...வாடானு சொல்லாத, எனக்கு அதுபிடிக்கவில்லை என்று மாஸாக பேசியதை பார்த்தால், பையன் ரொம்ப கோபக்காரனா இருப்பான் போல என்று நினைத்தால், சில்மிஷ மன்னாக இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமிராக்கள் இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறதோ இல்லையோ, அசல் கோலாரின் தீவிர விஸ்வாசிகள் தொடர்ந்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

மாடல் அழகிக்கு ரூட்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே குயின்சி மீது ஒரு கண்ணு வைத்துக்கொண்டு பிட்டுபோட ஆரம்பித்தார் அசல். இதனால், குயின்சி உடையை தடவுவது, கையை தடவுவது, பின்னாலே சுற்றுவதுமாக இருந்தார். ஆனால், குயின்சியோ அசலை கண்டுகொள்ளவே இல்லை. இனிமேல் குயின்சி செட்டாகாது என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகிக்கு நைசாக ரூட்விட காதல் தீ இப்போது தாறுமாறாக பற்றி எரிகிறது.

உடை மாற்றும் அறையில் சமாதானம்
நேற்று பொம்மை டாஸ்கில் அசல் கோலாரின் பொம்மையை எடுத்துக் கொண்டு நிவாஷினி ஓடினார். ஆனால், அசலின் பொம்மையை ஸ்லாடில் வைக்கவிடாமல், தனம், ஜனனி, ஷிவின் ஆகியோர் தடுத்தனர். இதனால், அசல் ஆட்டத்தைவிட்டுவெளியேற்றப்பட்டார். ஆட்டத்தில் இருந்து வெளியேறியதால் ஆத்திரம் அடைந்த அசல், நான் என் பொம்மையை எடுக்காதே என்று சொன்னேன்... ஏன் எடுத்த என்று நிவாஷினியிடம் சண்டை போட்டார். பின்னர், உடை மாற்றும் அறையில் நிவாஷினியை சமாதானப்படுத்தினார். வெறும் சத்தம் மட்டும்தான் கேட்டுச்சி என்ன நடந்தது என்று தெரியல.

ச்சீ..என்ன இதெல்லாம்
இதையடுத்து, கோபமாக இருக்கும் அசலை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என நினைத்த நிவாஷினி, அசல் கோலாரை கட்டிப்பிடித்து கொண்டு, கழுத்தில் இரண்டு கைகளையும் போட்டு, முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ச்சீ..என்ன இதெல்லாம், அவன் தான் சில்மிஷ மன்னன் என்றால், இந்த பொண்ணும் இப்படி இருக்காங்களே, இவங்க ரெண்டு பேரையும் டபுள் எவிக்ஷன்ல வெளியில் அனுப்பினால் தான் இந்த வீட்டிற்கு நல்லது எனக்கூறித் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











