கல்யாணமும் விவாகரத்தும்.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவின் பன் பட்டர் ஜாம் டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை: பூமர்ஸில் இருந்து ஜென் ஸி வெர்ஷன் என காலம் மாறிய நிலையில், காதல், திருமண உறவு எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட்டை விட மிகவும் வேகமாக மாறிவிட்டதை எடுத்துக் காட்டும் படமாக பன் பட்டர் ஜாம் உருவாகியிருப்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5ல் டைட்டிலை தட்டித் தூக்கிய ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகிறது.
அந்த படத்தின் காமெடி கலந்த காதல் மற்றும் கருத்து வேறுபாடு என கருத்தும் அடங்கிய படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. பீனிக்ஸ் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ஆசியுடன் வெளியாகவுள்ள இந்த படமாவது ஜூலை மாதத்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கில்லி உள்பட ஏகப்பட்ட இடங்களில் விஜய்யின் மேனரிஸத்துடன் நடித்துள்ள ராஜு ஜெயமோகனின் இந்த படத்தின் டிரைலர் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பன் பட்டர் ஜாம் டிரைலர் ரிலீஸ்: 90 களில் அதிகம் விரும்பி சாப்பிடப்பட்ட பன் பட்டர் ஜாம் அதன் பின்னர் 2கே கிட்ஸ்களால் மதிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் தற்போது ஜென் ஸி கிட்ஸ்களால் விரும்பப்பட ஏகப்பட்ட இடங்களில் புதிய ஸ்டார்டப் தொழிலாகவே மாறிவிட்டது. பன் பட்டர் ஜாம் என டேஸ்ட்டான பெயரை இயக்குநர் ராகவ் மிர்தத் தனது படத்துக்கு வைக்க, இந்த படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜோ படத்தில் ஹீரோயினாக நடித்த பாவ்யா த்ரிகா மற்றும் ஆத்யா பிரசாத் என முதல் படத்திலேயே ராஜு ஜெயமோகனுக்கு 2 ஹீரோயின்கள்.
டிரைலர் எப்படி இருக்கு?: இந்த ஆண்டு கல்லூரி மற்றும் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் இந்த படமும் வாழ்க்கையில் விழும் அடிகள் குறித்து அலசி ஆராயும் ஒரு ஜாலியான மெசேஜ் படமாகவே உருவாகியிருக்கிறது என தெரிகிறது. அப்பாவாக சார்லி, அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் மாமியாராக தேவதர்ஷினி என காஸ்டிங்கே கலக்கலாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ராஜுவின் எக்ஸ்பிரஷன் பெரிதாக கைகொடுக்கவில்லை. காமெடி சீன்களில் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். காதல், திருமணம் மற்றும் இன்றைய தலைமுறையினர் அவசரப்படும் விவாகரத்து என 3 ஏரியாக்களை டச் செய்துள்ள நிலையில், கம்ப்ளீட் பேக்கேஜாக அனைத்து வயதினரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என்றே தெரிகிறது.
மக்கள் ஆதரவு கிடைக்குமா?: வரும் ஜூலை 18ம் தேதி படம் வெளியான உடனே மக்கள் எந்தளவுக்கு பிக் பாஸ் ராஜுவுக்கு ஓட்டுப் போட்டு ஆதரவு கொடுத்தது போல படம் பார்த்து ஆதரவு கொடுக்கின்றனர் என்பது தெரிந்துவிடும். ஜூலை மாதம் வெளியான தமிழ் படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில், ராஜுவுக்கு அவரது அறிமுக படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து வெளியான ஜோ படம் ஹிட் அடித்ததை போல இந்த படமும் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











