பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் இந்த ஓவியத்தில் இருப்பது யார்னு கண்டுபிடிங்க
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஓவியம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிக் பாஸ் 3 வீட்டில் கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை ஓவியங்கள் அதிக அளவில் உள்ளன. விருமாண்டி கமல் ஹாஸன் இருக்கிறார், பத்து தலை ராவணன் இருக்கிறார், கோவில் ஓவியம் இருக்கிறது.
இந்நிலையில் ஃபுல் மேக்கப்புடன் இருக்கும் ஒரு பெண்ணின் ஓவியத்தால் தான் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷோபனா
பிக் பாஸ் 3 வீட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் ஓவியம் ஸ்ரீதேவியுடையது என்கிறார்கள் சிலர். சிலரோ இல்லை இல்லை அது நடிகை ஷோபனாவின் ஓவியம் என்கிறார்கள். கண்களை பார்த்தால் ஸ்ரீதேவி போன்று தான் தெரிகிறது. ஆனால் ஸ்ரீதேவி இல்லை என்றும் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டில் கமல், ரஜினியின் ஓவியம் வைத்ததால் அது ஸ்ரீதேவியாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே குழப்பமா இருக்கு பாஸ். நீங்களாவது கண்டுபிடித்து சொல்லுங்களேன்.
கஸ்தூரி
அந்த பெண்ணின் ஓவியம் கஸ்தூரி போன்று இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதை பார்த்த கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அட, ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே ! #BiggBossTamil3. அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியாளர்களில் பலரை எனக்கு தெரியும். அவர்களுக்காக நிகழ்ச்சியை பார்க்க முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்ஸ்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியத்தை பார்த்தால் உங்களை போன்று ஒன்றும் தெரியவில்லையே. ஆசையப் பாரு அக்காவுக்கு என்று கஸ்தூரியின் ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

பெயர்
அந்த ஓவியத்தில் இருப்பது ஸ்ரீதேவியா, ஷோபனாவா, கஸ்தூரியா என்பது நிச்சயமாக தெரியவில்லை. அது யார் என்பது தெரிய வேண்டுமானால் அதை வரைந்த புண்ணியவான் தான் கூற வேண்டும். நெட்டிசன்கள் இப்படி குழம்ப வேண்டும் என்று நினைத்து தான் அந்த ஓவியத்தை வைத்திருப்பார்களோ. பிக் பாஸ் சரியான வில்லங்க பாஸாக உள்ளாரே. இல்லை என்றால் ஸ்ரீதேவியை வரைய முயன்று அது இப்படி வந்துவிட்டதோ?


Click it and Unblock the Notifications











