இந்த மனசுதான் சார் கடவுள்.. சாண்டி வீட்டுக்கு மனைவி, மகனோடு போய் ‘லாலா’வைப் பார்த்த சித்தப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன், தனது குடும்பத்துடன் சாண்டி வீட்டுக்கு சென்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Shocking about Saravanan : சரவணன் பற்றிய அதிர்ச்சி தகவல்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன், தனது குடும்பத்துடன் சாண்டியின் குடும்பத்தாரை அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சக போட்டியாளர்களிடமும், மக்களிடமும் நல்ல பேரைப் பெற்றிருந்த சரவணன், கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

கலைமாமணி விருது:

கலைமாமணி விருது:

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், ஊடகங்களை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சரவணன். சொந்த ஊரில் தங்கி இருந்த அவர், தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை வாங்குவதற்காக சென்னை வந்திருந்தார்.

சாண்டி மகள்:

சாண்டி மகள்:

அப்போது சரவணன் தனது மகன் மற்றும் இரண்டாவது மனைவியுடன், பிக் பாஸ் போட்டியாளரான சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்துள்ளார். அப்போது சாண்டியின் குழந்தை லாலாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் சரவணனின் மனைவி மற்றும் மகனும் உள்ளனர்.

நல்ல நண்பர்கள்:

நல்ல நண்பர்கள்:

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, சாண்டி மற்றும் கவினுடன் தான் சரவணன் நெருக்கமாக இருந்தார். எப்போதும் அவர்கள் மூவரும் தான் ஒரு அணியாக இருந்தனர். கவினுக்கும், சாண்டிக்கும் சரவணன் அவ்வப்போது நல்ல அறிவுரைகள் கூறி வந்தார். சரவணன் வெளியேறிய பிறகு தான் சாண்டி தற்போது அதிகமாக கோபப்படவே தொடங்கி இருக்கிறார்.

வைரல் புகைப்படம்:

சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது அறிந்து சாண்டியும், கவினும் தான் அதிகம் வருத்தப்பட்டனர், கதறி அழுதனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டைத் தாண்டியும் தங்களுக்கிடையேயான நட்பை நிரூபிக்கும் வகையில் சாண்டியின் வீட்டுக்கு சரவணன் சென்றுள்ளார். சரவணன் மற்றும் சாண்டி ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

சரவணனுக்கு பாராட்டு:

சரவணனுக்கு பாராட்டு:

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரவணனை பாராட்டி வருகின்றனர். "இந்த மனசு தான் சார் கடவுள்", எனும் அன்பே சிவம் டயலாக்கை பலர் கமெண்டாக பதிவிட்டுள்ளனர். சரவணனை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X