“ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி !

Recommended Video

Bigg Boss Kondattam : Sherin Tharsan Dance : குத்தாட்டம் போடும் கண்மணிகள்

சென்னை: கவின் மற்றும் சாண்டி இருவரும் நடிகர் சரவணனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3ல் மிகவும் பேசப்பட்ட போட்டியாளர் சரவணன். பிக் பாஸ் வீட்டில் பெரிதாக எதிலும் கலந்துகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தார். ஆனால் எப்போதும் நடுநிலையாக பேசியதால், பிக் பாஸ் வீட்டிலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் உண்டானது.

ஆனால், ஒரு நாள் கமலிடம் பேசும் போது சிறுவயதில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் தான் சென்றதாகக் கூறினார். இது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சரவணன் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புரியாத புதிர்

புரியாத புதிர்

சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு அது தான் உண்மையான காரணமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து பேசுவதற்கு சரவணன் தொடர்ந்து மறுத்து வருகிறார். பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு கூட அவர் அழைக்கப்படவில்லை.

நட்பு

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சரவணனுடன் நெருக்கமாக இருந்தது கவினும், சாண்டியும் தான். பருத்திவீரன் படத்தில் வரும் கேரக்டர் போல நிஜத்திலும் சரவணனை சித்தப்பு என்றே அவர்கள் அழைத்து வந்தனர். சரவணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரை மூன்று பேரும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தனர்.

தங்க சித்தப்பு

தங்க சித்தப்பு

நிகழ்ச்சி முடிந்தபிறகும் கூட அடிக்கடி தங்களது பேச்சுகளில் சரவணனைப் பற்றி மறக்காமல் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் கவின் மற்றும் சாண்டி சரவணனை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்துள்ளனர். இதனை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர். "எங்க சித்தப்பு தங்க சித்தப்பு" என கவின் கேப்சன் கொடுத்துள்ளார்.

கட்டித்தழுவி முத்தம்

கட்டித்தழுவி முத்தம்

"சித்தப்பு இஸ் பேக். சரவணன் அண்ணாவ ஒரு வழியா புடிச்சிட்டோம். நானும் கவினும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம் அண்ணா", என சாண்டி தெரிவித்துள்ளார். மூவரும் கட்டித்தழுவி, முத்தம் கொடுத்து அன்பை பகிர்ந்துள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிக் பாஸ் 3 கொண்டாட்டத்தில் சித்தப்புவும் இருக்கிறாரா என அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம்.

மகன் பிறந்தநாள்

மகன் பிறந்தநாள்

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே தன் மகன் குறித்து அடிக்கடி பேசி வந்தார் சரவணன். அந்த மகனின் பிறந்தநாளை முன்னிட்டு தான் சரவணனை கவினும், சாண்டியும் நேரில் சந்தித்துள்ளனர். அவர்களது புகைப்படத்தின் பின்பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் சுவர்களில் தெரிகிறது.

ராதிகா

ராதிகா

இது தவிர, சரவணன் தனது மகனின் பிறந்தநாளை ராதிகாவுடன் நடித்து வரும் மருத படப்பிடிப்பு தளத்திலும் கொண்டாடியுள்ளார். நடிகை ராதிகா முன்னிலையில் தன் மகனுக்கு கேக் வெட்டினார் சரவணன். இதில் சரவணனின் இரண்டாவது மனைவியும் கலந்து கொண்டார். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மருத படத்தில் சரவணனும், ராதிகாவும் அண்ணன், தங்கையாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X