பிரம்மாண்ட பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவா இருக்கே.. ராஜமெளலி முதல் ராஷ்மிகா வரை வேற லெவல் என்ட்ரி!

ஹைதராபாத்: பிக் பாஸ் வரலாற்றிலேயே இப்படியொரு கிராண்ட் ஃபினாலேவை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு 4 பிரம்மாண்ட படங்களின் புரமோஷனும் ஒரே மேடையில் நடைபெற்றுள்ளது.

இயக்குநர் ராஜமெளலி, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, ஷ்ரேயா, நானி, நாக சைதன்யா, சாய் பல்லவி என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒட்டுமொத்த டோலிவுட் ரசிகர்களையும் டிவிக்கு முன்பாக கொண்டு வந்து அமர்த்தி உள்ளது.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக அரங்கேறி உள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்ட மாஸ் நிகழ்ச்சியாக இந்த கிராண்ட் ஃபினாலே ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

நாகார்ஜுனா ஹோஸ்ட்

நாகார்ஜுனா ஹோஸ்ட்

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் நானி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை அதன் பிறகு நாகார்ஜுனா தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பிக் பாஸ் தெலுங்கு 5வது சீசன் நியூ இயருக்கு முன்னதாகவே முடிந்து விட்டது.

ராஜமெளலி என்ட்ரி

ராஜமெளலி என்ட்ரி

இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நம்பர் ஒன் இயக்குநராக மாறி உள்ள இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவுக்கு வருகை தந்து இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்ட பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவாக மாற்றி விட்டார். பரம்பரா படத்தின் டீசரையும் ராஜமெளலி பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் வெளியிட்டார். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காகவும் நாடு முழுவதும் தீவிர புரமோஷன் செய்து வருகிறார்.

ரன்பீர், ஆலியா

ரன்பீர், ஆலியா

பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர திருமணத்தை செய்து கொள்ள தயாராகி வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் இந்த கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஆர்.ஆர்.ஆர் மற்றும் பிரம்மாஸ்த்ரா புரமோஷன்களும் களைகட்டின.

புஷ்பா ராஷ்மிகா

புஷ்பா ராஷ்மிகா

புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அடுத்ததாக அரங்கில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தனர். புஷ்பா படம் பாக்ஸ் ஆபிஸில் எப்படி அசத்தி வருகிறது என்பது குறித்து இயக்குநர் சுகுமார் பேசினார்.

நானி, சாய் பல்லவி

நானி, சாய் பல்லவி

புஷ்பா படத்தின் நடிகர்கள் வந்து சென்ற பிறகு ஷியாம் சிங்கா ராய் படக்குழுவினரான நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி நாகார்ஜுனாவை சந்தித்து பேசினார்கள். பின்னர் சாய் பல்லவி மற்றும் கீர்த்தி ஷெட்டி பிக் பாஸ் வீட்டுக்குள்ளே சென்று ஒருவரை எவிக்ட் செய்து வெளியே கொண்டு வந்தனர்.

பணத்துடன் வந்த நானி

பணத்துடன் வந்த நானி

பிக் பாஸ் வீட்டுக்குள் கடைசியாக இருந்த ஷாமுக், சன்னி, ஸ்ரீராமா, மானஸ் ஆகிய நான்கு பேருக்கு முன்னதாக பணப்பெட்டியுடன் உள்ளே நுழைந்த நடிகர் நானி பணத்தை யார் எடுக்கிறார் என்று கேட்க மூன்று பேரும் காசு வாங்கி வெளியேற மறுத்து விட்டனர். அதன் பிறகு மானஸ் எவிக்ட் ஆனார்.

ஷ்ரேயாவின் குத்தாட்டம்

ஷ்ரேயாவின் குத்தாட்டம்

நடிகை ஷ்ரேயா பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடையில் ஸ்பெஷல் குத்தாட்டத்தை போட்டு பிக் பாஸ் தெலுங்கு ரசிகர்களை சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு சென்றார். ஜதி ரத்னலு நடிகை ஃபரியா அப்துல்லாவும் சூப்பரான குத்தாட்டத்தை போட்டார்.

நாக சைதன்யாவும் என்ட்ரி

நாக சைதன்யாவும் என்ட்ரி

டோலிவுட் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் மகன் நாக சைதன்யாவையும் வரவேற்றார் நாகார்ஜுனா. புரோ கபடி லீக் விளையாட்டை புரமோட் செய்த நாக சைதன்யா தங்க பெட்டியுடன் உள்ளே நுழைந்த போதும் எந்த போட்டியாளர்களும் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.

சமந்தா மிஸ்சிங்

சமந்தா மிஸ்சிங்

நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆகவில்லை என்றால் சமந்தாவும் இந்த பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டிருப்பார் என்றும் அவர் மிஸ் ஆனது வருத்தத்தை தருவதாக சமந்தா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சீசனில் நாகார்ஜுனா இல்லாத நேரத்தில் தெலுங்கு பிக் பாஸை சமந்தா தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 20th December 2021 - Promo 3 | Priyanka-வை Nominate செய்த Niroop, கொழுந்து விட்டு எரியும் பகை
தமிழ் பிக் பாஸ் எப்படி இருக்கும்

தமிழ் பிக் பாஸ் எப்படி இருக்கும்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை பார்த்து விட்டு அப்படியே தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் இப்படியொரு கிராண்ட் ஃபினாலேவில் குறைந்த பட்சமாவது இந்த சீசனில் இருக்குமா என்றும் இல்லை என்றால் கடந்த சீசன் போட்டியாளர்கள் மட்டும் தான் வருவார்களா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X