பிக் பாஸில் மான் கராத்தே விளையாடி ஜெயித்த கிரண்.. ஜெமினி ஹீரோயினுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!
ஹைதராபாத்: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு கிரண் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் பல்பு கொடுத்த கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.
நடிகை கிரணின் பப்ளியான முகத்தில் தோன்றும் கியூட்டான ரியாக்ஷன்கள் ரசிகர்களை அவருக்கு தனியாக ஆர்மி அமைக்கவே தூண்டியுள்ளது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. அதில் பிரபல போட்டியாளர்களாக நடிகை ஷகிலா மற்றும் கிரண் பங்கேற்றனர். இந்த இரண்டு போட்டியாளர்களும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கோலிவுட் ரசிகர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடித்து விட்டது.
மான் கராத்தே விளையாடிய கிரண்: சமீபத்தில் நடைபெற்ற பிஸிக்கல் டாஸ்க்கில் நடிகை கிரண் இன்னொரு போட்டியாளர்களுடன் மல்யுத்தம் செய்வது போன்ற போட்டி நடைபெற்றது. அந்த போட்டியின் போது நடிகை கிரண் சக போட்டியாளரை அடித்து துவம்சம் பண்ணாமல் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே மான் கராத்தே போட்டு வந்தார்.
ஆனால் கடைசியில், எதிர்பாராத விதமாக நடிகை கிரணை தாக்க வந்த பெண் போட்டியாளர் குறிப்பிட்ட கோட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதன் காரணமாக அந்த போட்டியில் மான் கராத்தே போட்டேன் வெற்றி பெற்றது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஜெமினி கிரணுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்ப்பா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடைசி வரை வருவாரா: அதன் வீடியோ காட்சிகளை நடிகை கிரணின் டீம் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைட்டுகளையும் வியூஸ்களையும் வருகிறது. மேலும் இந்த வாரம் நாமினேஷன் இல் இடம்பெற்றுள்ள நடிகை கிரணுக்கு ஓட்டுப்போட்டு தொடர்ந்து அந்த வீட்டில் அவரை இருக்க வைக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் பிக் பாஸ் ரசிகர்களும் சேர்ந்து கிரணுக்கு வாக்கு செலுத்தி வருவதாக கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். கடைசிவரை நடிகை கிரண் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் ஏகப்பட்ட கவர்ச்சி விருந்து கன்ஃபார்ம் என்பதால் அவ்வளவு எளிதாக நடிகை கிரணை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கிரணுக்கு இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ள நிலையில், அதிக ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். சொல்ல முடியாது ஒரு வேளை டைட்டிலையே கிரண் தட்டித் தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என கிரண் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











