அந்த நடிகரால் மதுவுக்கு அடிமையானேன்..பகீர் தகவலை பகிர்ந்த பிக்பாஸ் பிரபலம்!

சென்னை : அந்த நடிகரால் தான் மதுவுக்கு அடிமையானேன் என்று பிக்பாஸ் நடிகை பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Jailer படத்தில் இவங்க தான் Heroine-னா? இந்த Twist-டை எதிர்பார்க்கலையே... *Kollywood

நடிகையும், மாடல் அழகியுமான தேஜஸ்வி மடிவாடா, 2013ம் ஆண்டு சீதம்மா வாக்கிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

முதல் படத்திற்கு பிறகு Manam, Heart Attack, Ice Cream, Lovers, Anukshanam Malli Malli Idi Rani Roju என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தேஜஸ்வி மடிவாடா

தேஜஸ்வி மடிவாடா

இதையடுத்து, 2018ம் ஆண்டு நானி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2ல் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் தேஜஸ்வி மடிவாடா. இதில் கௌஷல் டைட்டில் வின்னராகவும், கீதா, தனிஷ், தீப்தி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கௌஷலுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் தேஜஸ்வி.

பரபரப்பு பேட்டி

பரபரப்பு பேட்டி

தற்போது தேஜஸ்வி கமிட்மென்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் படம் குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அப்போது, செய்தியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கௌஷலுடன் ஏற்பட்ட சண்டை குறித்து கேள்வி எழுப்பினார்.

நடித்துள்ளார்

நடித்துள்ளார்

அதற்கு பதிலளித்த தேஜஸ்வி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ஆறுதலாக இருந்தவர் பிந்து மாதவிதான், எனக்கு பிடித்தவரும் அவர் தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானேன். கௌஷல் பிக் பாஸ் ஹவுஸில் வெறும் ஆக்டிங் செய்தார், அவரின் உண்மையான முகம் அது இல்லை. கௌஷல் என்னை மிகவும் டார்ச்சர் செய்தார் என்னை பற்றி பல ஆபாசமான கருத்துக்களை அவர் பரப்பினார்

மதுவுக்கு அடிமையானேன்

மதுவுக்கு அடிமையானேன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மிகவும் விரக்தி அடைந்தேன், மனஉளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். இப்போது அதில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாய்ப்புக்காக பாலியல் சலுகைகளைப் பெண்களிடம் எதிர்பார்ப்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்று இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X