வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. மோனல் என்னம்மா குத்துறாங்க பாருங்க!

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் நடனமாடி அசத்தி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த மாதம் செப்டம்பர் 6ம் தேதி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் ஆரம்பமானது.

17 போட்டியாளர்களுடன் 105 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பிக்பிரதர் என வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் 14வது சீசன் ஆரம்பமாக உள்ளது.

தொகுப்பாளர்கள் மாற்றம்

தொகுப்பாளர்கள் மாற்றம்

தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். மூன்றாவது மற்றும் நான்காவது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி தொகுப்பாளர்கள் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

வெற்றிகரமாக இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கில் ஆரம்பமாகி 10 நாட்களுக்கும் மேல் கடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய ஒரு எபிசோடில் வழக்கம் போல போட்டியாளர்களை எழுப்ப இசைக்கும் பாடலாக தளபதி விஜய்யின் மாஸ்டர் பட பாடல் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கப்பட்டது.

செம குத்து

செம குத்து

அந்த பாடலை கேட்டதும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் படுக்கையில் இருந்து எழுந்து வந்த செம குத்து குத்தி நடனமாடினார்கள். நடிகை மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட 17 போட்டியாளர்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பரான ஸ்டெப்களை போட்டு நடனமாடிய வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

மோனல் கஜ்ஜார்

மோனல் கஜ்ஜார்

தமிழில் விக்ரம் பிரபுவுடன் சிகரம் தொடு நடிகர் கிருஷ்ணாவுடன் வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு அவர் நடனமாடியதை பலரும் பார்த்து, மோனல் கஜ்ஜாரா இது என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

இங்கேயும் ஒலிக்கும்

இங்கேயும் ஒலிக்கும்

அக்டோபர் 4ம் தேதி ஒளிபரப்பாகவுள்ள கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சியிலும் மாஸ்டர் பட பாடலுக்கு போட்டியாளர்கள் நடனமாடுவார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. எப்பதான் அக்டோபர் 4ம் தேதி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X