பெண்ணிடம் அநாகரீகம்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. நடந்தது என்ன தெரியுமா?
சென்னை: தமிழ் பிக் பாஸ் எப்படி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறதோ அதேபோல தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அதில், இந்த வாரம் ஹைலைட் என்னவென்றால் போட்டியாளர் செய்த தவறுக்காக மேடையிலேயே மண்டிகிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் நாகார்ஜுனா. இது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது வருகிறது.
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே ரிது சௌத்ரி மற்றும் கல்யாண் படாலா ஆகியோரின் காதல் கதை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ரிது சௌத்ரி, பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பே கணவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும், வேறு ஒருவருடன் உறவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

தெலுங்கு பிக் பாஸ் 9: இதையடுத்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ரிது சௌத்ரியும் கல்யாண் படாலாவும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இது ஒரு நட்பு என்று பலர் கருதினார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இவர்களுக்கிடையேயான உறவு மேலும் ஆழமானது. ஒரு கட்டத்தில், கல்யாண், ரிதுவிடம் காதல் இருப்பதாக நேரடியாகவே தெரிவித்தார். ஆனால் ரிது, அதை வெறும் நட்பு என்று கூறி மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பெண் போட்டியாளரிடம் இப்படியா: இருப்பினும், கல்யாண் தொடர்ந்து ரிதுவின் பின்னால் சென்றார். அவர் மீதான தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி இருவரும் தனியாக பேசி வருகின்றனர். இருப்பினும் கடந்த வாரம் ரிதுவிடம் கல்யாணம் கடுமையாக நடந்து கொண்டு அவரை தள்ளிவிட்டு, நான் பேசுவதை கேள் என்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கல்யாணை பலரும் கடுமையாக வசைப்பாடினார்கள். இதையடுத்து, இந்த வாரம் நாகார்ஜூனா பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கல்யாண் பிக் பாஸ் வீட்டில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், பெண்களை பெல்டால் அடிக்கும் ஆண்களை ஆதரிப்பது போலாகிவிடும் . இதற்கு மேல் நீங்கள் இந்த வீட்டில் இருந்தது போது, உங்களுக்கு ரெட் கார்ட் கொடுத்துவிட்டேன் வெளியில் வாங்க என்றார்.
மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போட்டியாளர்: இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து போக, ரிது நாகார்ஜூனாவிடம் சார் என் மேலும் தவறு இருக்கிறது. இந்த முறை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி கெஞ்சினார். அதே போல ஆடியன்சும் கல்யாண் நல்ல போட்டியாளர் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கு இந்த முறை மன்னித்து விடுங்கள் என்று ஆடியன்ஸும் கேட்டனர். இதையடுத்த மனமிறங்கிய நாகார்ஜுனா, கல்யாண் செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை கொடுத்தாக வேண்டும் என மண்டியிட்டு அனைவரும் முன்பும் மன்னிப்பு கேட்க சொன்னார். அது மட்டுமல்லாமல் ரிதுவிடமும் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்டார் கல்யாண். ஒரு நேஷனல் மீடியாவில் இப்படி அனைவரும் முன்பும் முட்டிக்கிட்டு மன்னிப்பு கேட்டது இணையத்தில் வைரலாகி பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











