தாமரைசெல்வி, பிரியங்கா சேஃப்… நாமினேஷனில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ் !
சென்னை : பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் சிபி, இசைவாணி, அக்ஷரா, மதுமிதா, ஐக்கி, ஸ்ருதி, நிரூப், அபினய், பாவனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, வழக்கமான நாமினேஷன் போல் செய்யாமல், இந்த வாரம் யாராவது இரண்டு பேரை காப்பற்ற வேண்டும் என பிக் பாஸ் ஒரு சுவாரசியமான ட்விஸ்ட்டை வைத்துள்ளார்.
இதில் பலர் தாமரைச்செல்வி மற்றும் பிரியங்காவை காப்பாற்றினார்.

வருண் கேப்டன்
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறும். இதில், பட்டிக்காடா பட்டணமா டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட ராஜூ மற்றும் சிபி போட்டி இட்டனர். ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்தப்பட்ட டாஸ்கில் அதிக கோள்களை போட்டு சிபி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வருண் தன்னிடம் இருந்த காயினை பயன்படுத்தி , சிபியின் தலைவர் பதவியை பறித்துக் கொண்டார். இதையடுத்து இந்த வாரத்தின் பிக் பாஸ் வீ ட்டின் தலைவராக வருண் தேர்வு செய்யப்பட்டார்.

நாமினேஷன் ப்ராசஸ்
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. ஆனால், வழக்கமான நாமினேஷன் போல் இல்லாமல், வித்தியாசமான முறையில் நடந்தது. அதாவது வழக்கமாக யாரை நாமினேட் செய்கிறீர்கள் என்று கேட்கப்படும் ஆனால், இந்த வாரம், பிக் பாஸ் வீட்டின் இரண்டு நபர்களை இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றுவதற்கு போட்டியாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தாமரை காப்பாற்றப்பட்டார்
அப்போது, தாமரையை ஸ்ருதி காப்பாற்றுவதாக அறிவித்தார், தாமரைக்கு இந்த மேடை முக்கியமான ஒன்று இதனால் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். அதேபோல, அக்ஷராவும், ஐக்கி பெரியும் தாமரை இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.

பிரியங்காவை காப்பாற்றிய மது
பிரியங்கா, மதுமிதா ஒரு வெகுளித்தனமான பெண் என்றும், போன வாரம் அவர் தலைவராக இருக்கும் போது சரியாக செயல்படாததால் அவர் பலர் நாமினேட் செய்வார்கள், இதனால், நான் அவர் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதேபோல, மதுமிதா, நிரூப் ஆகியோர் பிரியங்காவை காப்பாற்றுவதாக தெரிவித்தனர்.

பிடித்தமானவர்களை காப்பாற்றினர்
நிரூப் மற்றும் ராஜு அண்ணாச்சியை காப்பாற்றுவதாக அறிவித்தனர். அதேபோல அபினய், ராஜு இந்த வீட்டில் இருந்தால் வீடு கலகல வென்று இருக்கும் இதனால் அவரை காப்பாற்றுவதாக அறிவித்தார். இதே போல பல போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்தமானவர்களை காப்பாற்றினர்.

நாமினேஷன் லிஸ்ட்
நாமினேஷன் பிராசஸில் இருந்து காப்பாற்றப்படாமல் வெளியேற்றப் பட்டியலுக்கு தேர்வானவர்களின் பெயர்களை பிக் பாஸ் அறிவித்தார். அதில் சிபி, இசைவாணி, அக்ஷரா, மதுமிதா, ஐக்கி, ஸ்ருதி, நிரூப், அபினய், பாவனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











