கடலை சாப்பிடல டா.. கன் எடுத்து சுடுறாரு.. வைரலாகும் பிக் பாஸ் டைட்டில் வின்னரின் ஆக்‌ஷன் அவதாரம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரவ் பதிவிட்டுள்ள வச்ச குறி தப்பாது போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆரவ் நடிப்பில் விரைவில் ராஜபீமா திரைப்படம் திரையில் ரிலீசாக காத்திருக்கிறது.

முதல் வின்னர்

முதல் வின்னர்

தமிழ் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலேயே பிரபலமாக ஓவியாவும் ஆரவ்வும் தான் காரணம். நடிகை ஓவியா தற்கொலை முயற்சியெல்லாம் செய்து எவிக்ட் ஆன நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை போராடி டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

முதன்முறையாக பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜெமினி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் எனும் பெயரில் வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

யானை படம்

யானை படம்

அடுத்ததாக ஆரவ் உடன் ஓவியா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள ராஜபீமா படம் கூடிய விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்கி படம் போல இந்த படமும் யானையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால், நிச்சயம் ராஜபீமா ஆரவ்விற்கு சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன் திருமணம்

மருத்துவ முத்தம் வரை சென்ற ஓவியா ஆரவ் காதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் நட்பாக மாறியது. பின்னர், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் நாயகி ராஹேய் உடன் கடந்த ஆண்டு ஆரவ் திருமணம் செய்து கொண்டார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் பிக் பாஸ் பிரபலங்களும் ஆரவ்வின் திருமணத்திற்கு வாழ்த்து கூறினர்.

கன் ஷூட்டிங்

கன் ஷூட்டிங்

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ் Ignore your distractions என கேப்ஷன் கொடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் சில போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ரொம்ப நளைக்கு பிறகு ஆரவ்வின் புதிய அவதாரத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

கடலை சாப்பிடல

கடலை சாப்பிடல

பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் கடலை சாப்பிட்டுக்கிட்டே டைட்டிலை வின் பண்ணிட்டாங்க என இந்த சீசன் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் முன்னாள் டைட்டில் வின்னர்களை கொச்சைப் படுத்தி பேசியிருந்தார். இந்நிலையில், ஆரவ் கன் ஷூட்டிங் செய்யும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி, ஆரவ் ஒன்றும் சும்மா டைட்டில் வின் பண்ணல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X