அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. சந்தோஷத்தின் உச்சத்தில் ஆரவ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் மற்றும் அவரது மனைவி ராஹேய் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் சக போட்டியாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.

அப்பாவான ஆரவ்

அப்பாவான ஆரவ்

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரவ் அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். நடிகை ராஹேய் என்பவரை ஆரவ் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அப்பாவான சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் ஆரவ்வுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் மற்றும் சக பிக் பாஸ் போட்டியாளர்களும் ஆரவ் மற்றும் ராஹேய் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட விளம்பர மாடல் ஆரவ் அந்த சீசனில் ரசிகர்களின் பேராதரவுடன் அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னராக மாறினார்.

ஓவியாவுடன் காதல்

ஓவியாவுடன் காதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ் மிகவும் நெருங்கி பழகி காதலித்தனர். ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் அந்த நிகழ்ச்சியை டிஆர்பியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. ஆனால், நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய நிலையில், இருவருமே நண்பர்கள் என அறிவித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தனர்.

முதல் படம்

முதல் படம்

முதன்முறையாக பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜெமினி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் எனும் பெயரில் வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கிடப்பில் ராஜபீமா

கிடப்பில் ராஜபீமா

அடுத்ததாக ஆரவ் ஓவியா உடன் இணைந்து ராஜபீமா எனும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கும்கி படத்தை போல யானையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த திரைப்படமும் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

வருண் ஜோடி

வருண் ஜோடி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஆரவ் மற்றும் ராஹேய் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் நாயகி ராஹேயை திருமணம் செய்து கொண்டார் ஆரவ். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக இருக்கும் வருண் தான் அந்த படத்தில் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X