தமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்.. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆரி!

சென்னை: நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.

Recommended Video

Stalin அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை.. என்ன காரணம்?

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இன்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினையும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றி

உதயநிதி ஸ்டாலின் வெற்றி

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். மொத்தமாக உதயநிதி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 81601.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்கி முதல் முறையே மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ள நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.

நேரில் சந்தித்த ஆரி

நேரில் சந்தித்த ஆரி

நடிகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனா வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் ஆரி.

பிரகாசமாக ஒளிரட்டும்

பிரகாசமாக ஒளிரட்டும்

மிகப்பெரிய வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியது பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் சூரியன் இனி மிகவும் பிரகாசமாக ஒளிரட்டும் என நடிகர் ஆரி அர்ஜுனன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உதயநிதியுடன் இணைந்து

உதயநிதியுடன் இணைந்து

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட் வெளியாகி வெற்றிப்பெற்ற ஆர்ட்டிக்கல் 15 படத்தை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தமிழில் ரீமேக் செய்கிறார். அந்த படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நடிகர் ஆரி அர்ஜுனன் ஆர்ட்டிக்கல் 15 படத்தில் சிறப்பு ரோலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X