கண்ணாடி போட்டுக்கிட்டு என்னம்மா இருக்காரு.. பிக் பாஸ் ஆரி அர்ஜுனனின் ஏலியன் பட டீசர் ரிலீஸ்!

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனின் நடிப்பில் உருவாகி உள்ள ஏலியன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், சாஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சூப்பர் ஹீரோ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கிராண்ட் ஃபினாலேவில் 16 கோடி வாக்குகள் பெற்று மக்கள் நாயகனாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பையையும் 50 லட்சம் ரூபாய் பரிசையும் வென்றார்.

உடம்பு முடியல

உடம்பு முடியல

பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு இது மக்களின் வெற்றி என சின்ன வீடியோ மட்டுமே போட்ட ஆரி, அதன் பின்னர் எந்தவொரு மீடியாவுக்கும் யூடியூப் தளங்களுக்கும் பேட்டி ஏதும் கொடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு வீடியோ போட்டு நன்றி சொன்ன ஆரி, டிக்கெட் டு ஃபினாலேவில் இருந்தே தனக்கு உடம்பு முடியல, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து ரசிகர்களை சந்திக்கிறேன் என்றார்.

புதுப்பட பூஜை

புதுப்பட பூஜை

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன உடனே ஆரி அர்ஜுனன் தனது அடுத்த புதுப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். போலீஸ் அதிகாரியாக முதல் முறையாக ஆரி அர்ஜுனன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஏலியன் படம்

ஏலியன் படம்

இந்நிலையில், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படமான எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். மேலும், கூடிய விரைவில் அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

சமீபத்தில் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் சூப்பர் ஹீரோ வீடியோ பாடல் வெளியானது. மின்னல் வேக மனிதனாக ஆரி சென்னை முழுக்க கடந்து செல்வதும், அநியாயங்களை தட்டிக் கேட்பதாகவும் அந்த பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. மேல இருந்து வரும் ஏலியன் ஆரிக்கு ஏதாவது விஷேச சக்தி கொடுக்கும் விதமாக திரைக்கதை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டீசர் எப்படி இருக்கு

டீசர் எப்படி இருக்கு

ரொம்பவே குட்டி டீசராக உள்ளது. பக்ஸ் என அழைக்கப்படும் பகவதி பெருமாள் ஏதோ சாக்கடை சந்துக்குள் அரண்டு போன படி எந்திரிக்க, அவரை அடுத்து ஒவ்வொருத்தராக எழுந்து நிற்க கடைசியாக கண்ணாடி போட்டுக் கொண்டு ஆரி அர்ஜுனன் எழுந்து நிற்கிறார். அவருக்கு முன்னாள் ஏலியன் ஒன்று கமாண்ட் பண்ணி நிற்கும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது.

முதல் ஏலியன் படமா?

முதல் ஏலியன் படமா?

தமிழகத்தின் முதல் ஏலியன் படம் என்று அறிவிப்புடன் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படமும் அதே டேக்கோடு தான் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நடித்த கலையரசி திரைப்படம் தான் தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X