சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

Recommended Video

ஆரி படத்திற்கு ஆதரவு கொடுங்கள் | PRODUCER ABUBUCKER PRESSMEET | FILMIBEAT TAMIL

மஞ்சள் நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து செம கெத்தாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

சக போட்டியாளர்கள் மீது சமூக வலைதளத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு ஆரி அளித்துள்ள நெத்தியடி பதில் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ஏன் கொண்டாடல

ஏன் கொண்டாடல

செண்டை மேளம் முழங்க, பட்டாசு வெடிக்க ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியை ஏன் கொண்டாடவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஆரி, இந்த வெற்றியை என்னுடைய வெற்றியாக பார்க்கவில்லை. மக்களின் வெற்றியாக பார்க்கிறேன். மக்கள் நல்ல விஷயங்களையும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் இந்த வெற்றியை கொண்டாடினால் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார்.

நான் நேர்மையானவனா

நான் நேர்மையானவனா

ஆரி அர்ஜுனனின் வெற்றிக்கு உண்மை மற்றும் நேர்மை இந்த இரண்டும் தான் காரணம் என்கிறார்களே, நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு, நான் மட்டும் தான் நேர்மையானவனா? நான் மட்டும் தான் உண்மையாய் இருக்கிறேனா, வாக்களித்த அனைத்து மக்களும் என் புள்ள என்றும், என் அண்ணன் என்றும் என் தம்பி என்றும், இதே போல ஒரு இடத்துல நேர்மையா இருந்தா அவனுக்கும் வெற்றி கிடைக்கணும் என நினைச்சி போட்ட ஓட்டுக்களால் தான் வெற்றிப் பெற்றேன் என்றார்.

பிக் பாஸ்க்கு ஏன்

பிக் பாஸ்க்கு ஏன்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகே பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே ஆரியை விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டிருக்க, மறுத்து வந்த நீங்க இந்த சீசனில் கலந்து கொள்ள காரணம் என்ன? என்ற கேள்விக்கு, தனது முதல் படமான ரெட்டச்சுழி படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா கேட்ட கேள்வி தான் இந்த சீசன் பிக் பாஸில் கலந்து கொள்ள என்னை தள்ளியது என்றார் ஆரி.

நீ நீயாக இருந்தால்

நீ நீயாக இருந்தால்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன், முதல் முறை அழைப்பு வரும் போது, அது பிரபலத்தை கெடுத்து விடும், அசிங்கப்படுத்தி விடும் என்றெல்லாம் சொல்லக் கேட்டு, செல்வதற்கு தயங்கினேன், அப்போது தான் இயக்குநர் தாமிரா, நீ நீயாக இருந்தால், மற்றவர்கள் எப்படி உன்னை மாற்ற முடியும், எப்படி தப்பா காட்ட முடியும் என்ற கேள்வியை எழுப்ப பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தேன் என்றுள்ளார் ஆரி.

தரம் தாழ்ந்த விமர்சனங்கள்

தரம் தாழ்ந்த விமர்சனங்கள்

உங்களையும், உங்கள் ரசிகர்கள் போர்வையில் மற்ற போட்டியாளர்களையும் சமூக வலைதளத்தில் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க என கேட்டவுடன், உடல் நலம் சரியில்லாத நிலையிலும், இந்த பேட்டியை அவசர அவசரமாக கொடுக்க அதுதான் காரணம். தரம் தாழ்ந்த விமர்சனங்கள் யார் மீது வைத்தாலும், அது கண்டனத்திற்குரியது என்றார்.

விமர்சனத்தில் முகம் தெரியும்

விமர்சனத்தில் முகம் தெரியும்

விமர்சனம் வைக்கக்கூடாது என சொல்ல மாட்டேன். வைக்கக்கூடிய விமர்சனத்தை பார்த்தால் திருத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் முகம் தெரியாது என்பதற்காக தரம் தாழ்ந்த விமர்சனத்தை வைத்து வருபவர்கள், அவர்கள் எழுதிவிட்டு அதை பார்த்து சந்தோஷப்பட முடியாது. அவர்கள் விமர்சனத்திலேயே அவர்களது முகம் தெரிந்து விடும் என்றார் நெத்தியடியாக!

அவங்களுக்கும் குடும்பம் இருக்கு

அவங்களுக்கும் குடும்பம் இருக்கு

ஆரி ஆர்மி என்கிற பெயரில் தான் மற்ற போட்டியாளர்களை அதிகமாக தரக்குறைவான வார்த்தைகளையும் பட்டப் பெயர்களையும் வைத்து கிண்டல் செய்து வருகின்றனர் என்றதும், யாரையும் தப்பா பேசாதீங்க, எல்லாரும் என் சக போட்டியாளர்கள், அவங்க இல்லைன்னா நான் இங்கே இல்லை. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு, விமர்சனத்தை கண்ணியமாக வைக்க ரசிகர்கள் கற்று கொள்ள வேண்டும் என்றார்.

நேர்மை வந்தது எப்படி

நேர்மை வந்தது எப்படி

நாம செய்யுற ஒரு விஷயம் நல்ல விஷயமாக இருந்தால், அதை கண்டு பயப்பட வேண்டாம். விமர்சனம் செய்பவர்கள் செய்து விட்டுப் போகட்டும் என அடிக்கடி எங்கப்பா சொல்வார். அவர்கிட்ட இருந்து தான் இந்த நேர்மை எனக்கு வந்தது. இதுவரை ஏகப்பட்ட தோல்வி படங்களை கொடுத்துருக்கேன், ஆனாலும், என்னை தூக்கிவிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். ரசிகர்கள் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று பேசிய ஆரியின் முழு வீடியோ மேலும், சில பாகங்களாக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதுதான் ஆரி

இதுதான் ஆரி

ஆரியின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இது தான் எங்கள் அண்ணன் ஆரி. இதுக்காகத் தான் அவருக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சோம். ஆரி மட்டும் தான் நேர்மைய? ஆரி ஒழுங்கா விளையாடலன்னு சொல்றவங்களாம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க, நாங்க இனி யாரையும் திட்டமாட்டோம் அண்ணா, மத்தவங்க பேசுறதாலே பதிலடி கொடுத்தோம் என ஏகப்பட்ட ரசிகர்கள் வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X