புதுசா மாடு வாங்கி இருக்கோம்.. BMW சொகுசு கார் வாங்கிய பாலாஜி..முருகதாஸ்.. நக்கல் போஸ்ட்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ன் ரன்னர் அப் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னரான பாலாஜி முருகாஸ் புதிதாக சொகுசு கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பல புதிய சொகுசு கார்களை வாங்கி வந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் பாலாஜி முருகதாஸும் இணைந்துள்ளார்.

ஷிவானி நாராயணன் லேட்டா வந்து லேட்டஸ்ட்டாக ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், பாலாஜி முருகதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், பிஎம்டபிள்யூ சொகுசு காருடன் மாஸ் காட்டி உள்ளார்.

ரன்னர் அப் டு டைட்டில் வின்னர்

ரன்னர் அப் டு டைட்டில் வின்னர்

விடா முயற்சி வெற்றித் தரும் என்பதை உறுதி செய்யும் விதமாக பிக் பாஸ் சீசன் 4ல் ரன்னர் அப்பாக வந்த பாலாஜி முருகதாஸ், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை போராடி டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் சிம்பு கைகளால் வாங்கியது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக அமைந்தது.

புதுசா மாடு வாங்கியிருக்கோம்

புதுசா மாடு வாங்கியிருக்கோம்

என்ன பாலாஜி முருகதாஸ் புதுசா மாடு வாங்கியிருக்கோம்னு போட்டுருக்காரே கமல்ஹாசனிடம் சொன்னது போல விவசாயம் செய்யப் போயிட்டாரோ என நெட்டிசன்கள் ஆவலுடன் அவரது இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டனர். அது மாடு இல்லை, BMW காரைத் தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்ததும், பாலா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

BMW வாங்கிய பாலா

BMW வாங்கிய பாலா

BMW - பாலா, அப்படியே தனது பெயருக்கு ஏற்றவாறு சொகுசு கார் வாங்கி அசத்தி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் பிரபலங்களான கேபி எல்லாம் சமீபத்தில் கார் வாங்கிய நிலையில், தற்போது சொகுசு காருடன் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஷிவானி வாழ்த்தல

ஷிவானி வாழ்த்தல

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் உடன் சக போட்டியாளர்களாக இருந்த ஆஜித், சோமசேகர், அர்ச்சனா மற்றும் ஜூலி உள்ளிட்ட பிரபலங்கள் பாலாவுக்கு வாழ்த்து சொல்லி ட்ரீட் கேட்டு வரும் நிலையில், சினிமாவில் பிசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் மட்டும் ஏன் எந்த வாழ்த்தும் சொல்லல என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஹீரோ பாலா

ஹீரோ பாலா

விக்ரம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் மூலம் ஷிவான் நாராயணன் வெள்ளித்திரையில் அறிமுகமாகி விட்டார். மேலும், பம்பர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலாஜி முருகதாஸையும் சீக்கிரமாக ஹீரோவாக பெரிய ஸ்க்ரீனில் பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X