பெண்ணின் உடலின் வளைவு தெரியுமா.. மாணவர்கள் முன்பு முத்துக்குமரன் வக்கிரமான பேச்சு!
சென்னை: பிக்பாஸ் சீசன் 8 வின்னர் ஆன முத்துக்குமரன் தமிழ் மீது அதீத பற்று கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு பட்டிமன்ற நிகழ்ச்சி பேச்சாளராகவும், பிரபல யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற முத்துக்குமரன் பெண்களின் உடலை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பிக்பாஸ்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8ஆவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சியிலேயே முத்துக்குமரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பெரிதாக மதித்து பேசினார். அவரது பேச்சை கேட்டு விஜய் சேதுபதியும் மெய்சிலிர்த்து போனார். இவ்வளவு சிறு வயதில் பெரிய பாடம் கற்றுத்தந்துள்ளாய் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். முத்துக்குமரனுக்கு இருக்கும் தமிழ் பற்றை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

தமிழ் பற்று: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தனக்குரியதாய் மாற்றி கொண்டார். அவரது தாய் வீட்டு வேலைகள் செய்து, அவரைப் படிக்க வைத்தார். முத்துக்குமரனுக்கு சிறு வயதிலேயே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நிறைய புத்தகங்களை வாசித்த முத்து, ரேடியா நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கேட்டு பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். பேசிப் பேசி பழகி, படிப்படியாக பேச்சாளராக மாறினார். ஒரு கட்டத்தில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வந்த முத்துக்குமரன் தன்னுடைய பேச்சுத் திறமையால் வாய்ஸ் ஓவர் ஆர்ட்ஸ்டிட்டாக தன் பயணத்தைத் தொடங்கினார்.
நீயா நானா: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் அசைவம் சாப்பிடுபவர்கள் முரட்டு குணம் கொண்டவர்கள் என லொள்ளு சபா ஜீவா தெரிவித்தார். அதற்கு எதிர் வாதத்தை வைத்த முத்துக்குமரன் சைவம் சாப்பிட்டால் நல்லவர்கள், அசைவம் சாப்பிட்டால் கெட்டவர்கள் என்று சொல்வது ஒரு பொய்யான உருட்டு. இதை ஏற்க முடியாது என தெரிவித்தார். இவரது பேச்சு பெரிய அளவில் ரீச் ஆனது. அவருக்கு ஆதரவும் பெருகியது. பின்பு, சாப்பாடு குறித்து பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது.

சாப்பாடு: தமிழ்நாட்டில் காரைக்குடி சமையல் என்றால் செட்டிநாடு உணவை போன்ற ஒரு சுவை வேறு எங்கும் கிடையாது என முத்துக்குமரன் சிலாகித்து பேசியுள்ளார். அதேபோன்று அவர் தனிப்பட்ட முறையில் யூடியூப் வீடியோக்களில் உணவு முறையையும், சாப்பிடுவதை பற்றிய வீடியோவை பதிவிட்டு பார்ப்பவருக்கும் பசியை தூண்டும் வகையில் இருக்கும் முத்துக்குமரனின் பேச்சு. பள்ளி விழாக்கள், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முத்துக்குமரனின் பேச்சுக்கள் நகைச்சுவையுடன் கலந்த தமிழ் உணர்வும் இருக்கும். அதை கேட்டு மக்களும் மகிழ்வார்கள்.
அநாகரீக பேச்சு: சமீபத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முத்துக்குமரன் பள்ளி மாணவர்கள் முன்பு பெண்ணின் உடல் வளைவு பற்றி தெரியுமா என்று கேட்கிறார். பின்பு, இது எப்படிப்பட்ட கேள்வி தெரியுமா, நான் பேசுவது மிகவும் வக்கிரமானதாக தெரியும், ஆனால், பெண்ணின் வளைவு என்பது புன்னகை தான். பெண்ணின் உடலில் புன்னகை அழகாக வளைந்து செல்லும் என பேசியுள்ளார். இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் சிரித்து கை தட்டினர். ஆனால், இப்பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்ப்புகள்: ஒரு பள்ளி விழாவில் பொறுப்பற்ற பேச்சாக இருப்பதாகவும், இதில் என்ன சிரிப்பு இருக்கிறது. மாணவர்கள் முன்பு இப்படித்தான் பேசுவதா என்றும் வீடியோவை பார்த்த சிலர் கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவர்களிடம் இப்படித்தான் தமிழ் பற்றை வளர்ப்பதா என்றும் கேட்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











