Raju Jeyamohan: பிக் பாஸ் ராஜு இப்போ எப்படி இருக்காரு பாருங்க.. ஒரே சுப்ரமணியபுரம் வைப் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனின் சமீபத்திய வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற ராஜு ஜெயமோகனை வைத்து படம் தயாரிக்க தயாராக இருப்பதாக வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார்.
ஆனால், பிக் பாஸ் சீசன் 6 முடிந்து 7வது சீசனே விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதுவரை ராஜு ஜெயமோகன் தனது சினிமா என்ட்ரி குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்.

பெருசா சாதிக்காத டைட்டில் வின்னர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஓட்டுத் தான் டைட்டில் வின்னரை தீர்மானிக்கும் என மக்களையும் சேர்த்துக் கொண்டு அந்த கேம் ஷோ நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிகின்றனர்.
ஆனால், மக்கள் செல்வாக்கை பெற்று பிக் பாஸ் டைட்டில் வின்னர்களாக மாறும் பலர் அதன் பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர்.

முதல் சீசனில் வெற்றிப் பெற்ற ஆரவ், இரண்டாம் சீசனில் வெற்றிப் பெற்ற ரித்விகா, மூன்றாம் சீசனில் வெற்றிப் பெற்ற முகேன், நான்காம் சீசனில் வெற்றிப் பெற்ற ஆரி அர்ஜுனன், ஐந்தாம் சீசனில் வெற்றிப் பெற்ற ராஜு ஜெயமோகன் மற்றும் கடைசியாக ஆறாவது சீசனில் வெற்றிப் பெற்ற அசீம் உள்பட பலரும் அந்த ஷோ இருக்கும் வரைத்தான் டிரெண்டிங்கில் உள்ளனர் என்கிற விமர்சனம் தொடர்ந்து எழத்தான் செய்கிறது.
ராஜு ஜெயமோகனை அதிகம் எதிர்பார்த்த ரசிகர்கள்: ஆரி அர்ஜுனுக்கு அடுத்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து ஆதரவு தந்தது பிக் பாஸ் ராஜு ஜெயமோகனுக்குத் தான். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியிலேயே தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ராஜு ஜெயமோகன் சினிமாவில் பெரிதாக வலம் வரவே இல்லையே ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் பார்த்த ராஜு ஜெயமோகன் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகராகவோ இல்லை அவர் விரும்பியபடி இயக்குநராகவோ வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்ற்னர்.
சுப்ரமணியபுரம் ஸ்டைலில்: இந்நிலையில், லாக்டவுனில் சிக்கிய நடிகர் போல முகம் முழுக்க தாடியுடன் பார்க்க அப்படியே சுப்ரமணியபுரம் சசிகுமார் போலவே மாறிவிட்டார் ராஜு ஜெயமோகன்.
லேட்டஸ்ட்டாக அவர் எடுத்து வெளியிட்டுள்ள போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறாரா ராஜு என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர். மேலும், சுப்ரமணியபுரம் வைப் சூப்பர் ராஜு பாய் என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











