ஒரே விரலில் விசில் அடிங்க.. தமிழ்நாடு முழுக்க கேட்கணும்.. விஜய்க்காக குரல் கொடுத்த பிக் பாஸ் வின்னர்!

சென்னை: காங்கேயத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ராஜு ஜெயமோகன் இனிமேல் விரல் அடிக்க ரெண்டு விரல் தேவையில்லை. உங்களோட ஒரே விரலில் விசில் அடிக்கலாம் என பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அரசியல் நெருங்கி வரும் நேரத்தில் பல சினிமா பிரபலங்களும் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி வருகின்றனர். திமுக ஆதரவு நடிகர்கள் விஜய்க்கு எதிராக பேசி வரும் நிலையில், தவெகவுக்கு ஆதரவான நடிகர்களும் விஜய்யின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Title Winner Raju Jeyamohan shows his direct support for Vijay s TVK

விஜய் மற்றும் சங்கீதா உறவு விரிசல் தொடர்பான சர்ச்சைகள் பெரிதாக வெடித்து வரும் நிலையில், விஜய்க்கு பகிரங்கமாக தனது ஆதரவை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் பேச ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

பிக் பாஸ் கற்றுக்கொடுத்த பாடம்: சிறு வயதில் தவறு செய்தால் அம்மா நம்மை அழைத்து தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும் என சொல்லிக் கொடுப்பாங்க. ஆனால், நாம் அதெல்லாம் குத்தாது என நினைத்துக் கொண்டு ரகசியமாக சில தவறுகளை செய்வோம். ஆனால், பிக் பாஸ் வீட்டில் அப்படி இல்லை நம்மை சுற்றியிருக்கும் 60 கேமராக்களும் அதற்கு பின்னாள் இருந்து பார்க்கும் மக்களும் கடவுளாகத் தெரிந்தனர். அதனால், ஆரம்பத்தில் நல்லவனாக நடிக்க வேண்டும் என நினைத்து தவறு செய்யாமல் கடக்க அதுவே அப்படியே கடைசியில் பழகிப் போயிடுச்சு என பிக் பாஸ் கற்றுத்தந்த பாடத்தை மேடையில் விவரித்தார் ராஜு ஜெயமோகன்.

ஒரு விரலில் விசில் அடிங்க: சர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடலை போல ராஜு ஜெயமோகன் மேடையில் பேசியது தளபதி ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. இனிமேல் ரெண்டு விரல் வச்சு இப்படி விசில் அடிக்க வேண்டாம், ஒரு விரல் வச்சே விசில் அடிக்கலாம் என ஓட்டுப் போடும் விரலைக் காட்டி பேசியதும் அரங்கத்தில் விசில் சத்தம் பறந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X