முதல் நாளே இப்படியா? குப்பையை அள்ளவிட்ட பிக்பாஸ்..ஓடி ஓடி வேலை பார்த்த ஹவுஸ் மேட்ஸ்!
சென்னை : பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளே நடுவீட்டில் குப்பையை கொட்டி ஹவுஸ் மேட்ஸ்களை அலறவிட்டுள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் சீசன் 6 நேற்று ஆட்டம்,பாட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதில், ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம், குயின்ஸி,விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன்,தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், மாடல் நிவாஷினி என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

லக்சரி பட்ஜெட்டு டாஸ்க்
முதல் நாளான இன்று லக்சரி பட்ஜெட்டுக்கான டாக்ஸ் நடைபெறுகிறது. அதில் பர்சர் ஒலித்தவுடன் வீட்டிற்குள் குப்பை கொட்டப்படும் அந்த குப்பையை போட்டியாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் பர்சர் அடித்துக்கொண்டே இருக்கிறதோ அவ்வளவு நேரம் குப்பை கொட்டிக்கொண்டே இருக்கும் போட்டியாளர்கன் பர்சரை கண்டுபிடித்து ஆஃப் செய்தால் தான் குப்பை கொட்டுவது நிற்கும்.

டங்குவார் கிழிந்து விட்டது
இதற்காக போட்டி ஆரம்பிக்கும் முன்பே போட்டியாளர்கள் பர்சர் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து அதை ஆஃப் செய்ய தயாராக இருந்தார்கள் இருந்தாலும், நடு வீட்டுக்குள் குப்பை கொட்டிக்கொண்டே இருந்தால், அனைத்து ஹவுஸ் மேட்டுகளும் குனிந்து நிமிர்ந்து சுத்தம் செய்வதற்குள் டங்குவார் கிழிந்து ஓடி ஓடி வீட்டை சுத்தம் செய்தனர்.

முதல் நாளே இப்படியா
வழக்கமாக கொளுத்திப்போடும் வேலையை பார்த்து டிஆர்பியை எகிற வைக்கும் பிக்பாஸ் முதல்நாளே ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அதாவது ஹவுஸ் மேட்ஸ்களிடம் உங்களை குறைவாக கவர்ந்த நபர் யார் என்று கேட்க அனைவரும் பதில் சொல்ல திணறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஜி.பி.முத்து எனக்கு எல்லாரையும் பிடிக்கும் என்று சொல்லி தப்பித்துக்கொண்டார்.

ஜனனி தான் முதல் டார்கெட்
அடுத்ததாக அனைவரும் ஜனனியை டார்கெட் செய்ய ஆரம்பிக்கின்றனர். நீ இப்படி அமைதியா இருந்தா கண்டிப்பா இங்கு தாக்கு பிடிக்க முடியாது என்று கூறுகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது இந்த வார டார்கெட் ஜனனி என்று மட்டும் தெரிகிறது. இனி வரும் நாட்களில் சண்டைக்களமாக பிக் பாஸ் வீடு மாறுவது கன்பார்ம். முதல் நாளே இப்படி ஆரம்பிச்சிடீங்களா பிக் பாஸ் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதனை வைத்தே இந்த வாரத்தில் கண்டிப்பாக சண்டை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











