பிக் பாஸ் அல்டிடேட்.. பாலாவை ரவுண்டு கட்டும் வனிதா.. உன்னால முடிஞ்சத பாதுக்கோ !
சென்னை : புகழ் பெற்ற பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி, தமிழில் ஐந்து சீசன்களை முடித்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடுக்காக பிக் பாஸ் வீடு 80ஸ் கல்லூரி காதல் கதையை நினைவூட்டும் வகையில், கல்லூரி, பேருந்து, டீ கடை என மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் பாலாஜி சரியாக நடிக்கவில்லை என்று கூறி, வனிதா இன்றைய போரை தொடங்குகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரச்சனைகளும், பஞ்சமே இல்லாமல் எப்போதும் ஒரே சண்டை தான். 17 நாளுக்குள் இவ்வளவு கலவரமா? என்று பார்க்கும் ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தாலும், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று சிலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். டாஸ்க் நேரத்தில் இவர்கள் அடித்துக் கொள்வதும் மீதமிருக்கும் நேரத்தில் இவர்கள் பேசிக்கொள்வதை பார்க்கும்போது இது எல்லாமே ஸ்கிரிப்ட் தானா என்று தோன்றுகிறது.

வனிதா தனி பாணி
வனிதா வந்த நாளிலிருந்து தனி பாணியில் விளையாடி வருகிறார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் என்னால் முடியாது என்பதை சொல்லிவிடுகிறார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே, நான் டாஸ்க் விளையாட வரல நான், நானா இருக்க மட்டும்தான் வந்தேன் என்று கூறிவிட்டு, சமைப்பது, சாப்பிடுவது, தூக்குவது, யாரையாவது வம்பு இழுப்பதுமாகவே இருக்கிறார்.

80ஸ் கல்லூரி மாணவர்கள்
பிக் பாஸ் வீட்டில் இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அனைவரும் 80களில் இருந்த அழகான கல்லூரி வாழ்க்கையை மீட்டு எடுக்கும் வகையில், அனைத்து போட்டியாளர்களும் 80ஸ் மாணவர்களாக மாறி இதயம் முரளி கலை கல்லூரிக்கு சென்றனர். இதில், முரளி, கமல், ஸ்ரீ தேவி,ஷோபான என பலரும் பல கெட்டப்புடன் வலம் வந்தனர்.

வாக்கு வாதம்
இந்த டாஸ்கில் பாலா சரியாக நடிக்கவில்லை என்று வனிதா கூறியதால், பாலாவுக்கும் வனிதாவுக்கும் வாக்குவாதம் முற்றியது. யார் எந்த டாஸ்க் பண்ணலாம் நடுவுல வந்து சொல்லமாட்டேன்னு சொல்லிட்டுத்தானே கேப்டனா வந்தீங்க, இப்போ வந்து நீ காமெடி சரியா பண்ணலைனு சொல்லி வந்து டிஸ்கரேஜ் பண்றீங்க என்று கேட்கிறார். இதற்கு , வனிதா நீ நடி இல்ல நடிக்காம போ அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வழக்கம் போல அவரது வேலையை டாஸ்கில் காட்டி உள்ளார்.

முடிஞ்சத பாத்துக்கோ
ஆனால், பாலாவோ நான் இப்படித்தான் நடிப்பேன், உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்பது போல அந்த இடத்தைவிட்டு போய்விடுகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வனிதாவுக்கு பயந்து பேசாமல் இருக்கும் போது, பாலா மட்டும் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டு வருகிறார். இதனால் இணையத்தில் அவருக்கு ஆதரவு பெருகிவருகிறது.


Click it and Unblock the Notifications











