கொளுத்திப்போட்ட வனிதா… அபிநய்யை வெளுத்து வாங்கிய தாமரை களேபரமான வீடு!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் துருதுருவென இருந்த தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
இதைப்பார்த்த பலரும் தாமரைக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறார், தாமரையின் வெகுளித்தனமான பேச்சுதான் அவருக்கு அழகு என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், இன்றைய எபிசோடில் தாமரை பேக்டு பாஃமுக்கு வந்து வனிதா, அபிநய் என ஒருத்தரையும் விட்டுவைக்காமல் வெளுவெளுவென வெளுத்துவிட்டார்.

பிக் பாஸ் சீசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல புதுமுகங்களும் அறிமுகம் இல்லாத நபர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் மட்டும் அதிகமான புதுமுகங்கள் கலந்துகொண்டிருந்தனர். அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி பின் அனைவரும் பிரபலமாகி விட்டனர்.

அமைதியான தாமரை
குறிப்பாக தாமரைக்கு பலர் தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டனர். அவரின் வெகுளித்தனமான பேச்சு, கலகலப்பான சிரிப்பு, அன்போடு பாப்பா, தம்பி என அழைப்பது அனைவருக்கும் பிடித்துவிட்டது. தற்போது, தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். ஆனால், பழைய துறுதுறுப்பு இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் தாமரை ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று கேட்டு வந்தனர்.

மோசமான போட்டியாளர்
இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், இந்த வாரம் மோசமான போட்டியாளர் 3 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தண்டனை தரும்படி பிக் பாஸ் கூறுகிறார். இதில், தாமரை, ஸ்ருதி , நிரூப் 3 பேரையும் ஹவுஸ்மெட்ஸ் தேர்வு செய்தனர். அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைக்கும்படி வனிதா கூறினார்.

இதைத்தான் எதிர்பார்த்தோம்
வனிதா கூறிய தண்டனையை கேட்டு கொந்தளித்த தாமரை, தண்டனை என்ன என்பதை வனிதா ஏன் முடிவு செய்ய வேண்டும். இந்த வீட்டில் மற்றவர்கள் எல்லாம் நல்லா விளையாடுறாங்களா? என நேரடியாகவே வனிதாவிடம் மோதிவிட்டார் தாமரை. அபிநய், நிரூப் என எல்லாரிடமும் கேட்டுத்தான் முடிவு செய்தேன் என்று வனிதா கூற, அபிநய் எல்லாம் ஒரு ஆள், அவர் கேமை ஒழுங்கா விளையாடுறாரா? எனக்கு கோபம் வந்துச்சுனா அவ்வளவுதான் என்று பேக்டு பாமுக்கு வந்துள்ளார் தாமரை. இதைப்பார்த்த ரசிகர்கள் தாமரை அக்கா இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று கருத்துக்கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











