யாருமே சரியா விளையாடல... வந்ததும் வேலையை காட்டிய விஷ பாட்டில் ரம்யா பாண்டியன்!

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் சினேகன், நிரூப்,பாலா,சுரேஷ்,சதீஷ், அனிதா, தாமரை, அபிராமி, சுருதி, ரம்யா பாண்டியன் என10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதில், தாடி பாலாஜி, ஷாரிக், அபிநய், வனிதா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க தொடங்கியது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியது. அது மட்டும் இல்லாமல் கடந்த வாரம் போட்டியாளர்களை விளாசி எடுத்துவிட்டார் சிம்பு. அவர் போட்டியாளர்களை கண்டித்த விதம் அனைவருக்கும் பிடித்து இருந்தது. வெளியேறிய தாடி பாலாஜியிடம் சிம்பு, அண்ணன் நம் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வரலாம் நாம் தான் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என பேசியது அனைவரையும் கவர்ந்தது.

நாமினேஷன்

நாமினேஷன்

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் புது என்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் உள்ளே வந்துள்ளார். லாஸ்லியா , ஷிவானி நாராயணன் மற்றும் யாஷிகா ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டிற்குள் ரம்யா பாண்டியன் வந்துள்ளார்.

விஷ பாட்டில் ரம்யா பாண்டியன்

விஷ பாட்டில் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியனுக்கு ஏற்கனவே ரசிகர்கள் விஷ பாட்டில் என்று ஒரு செல்லபெயரை வைத்து இருக்கிறார்கள். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் நேற்று மாஸா என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், வந்ததுமே என்ன கேம் விளையாடுறீங்க... கேம்ல ஒரு சுவாரசியமே இல்லை... யாருமே விளையாட்டை சரியா விளையாடவில்லை என்று போன சீசனில் செய்த வேலையை செய்ய தொடங்கி உள்ளார். உடனே, நம் தாமரை அக்கா விடுவாரா சரமாரி கேள்வியை கேட்கிறார்.

இனி உனக்கு இருக்கு

இனி உனக்கு இருக்கு

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் விஷ பாட்டில் வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட்டியா என்றும், என்ன தாமரை என்கிட்டவா... இனி உனக்கு இருக்கு என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட் 39 நாட்களை எட்டிய பின்பும் சுவாரசியம் வந்தமாதிரி தெரியவில்லை. இனியாவது எதாவது புதுசா நடக்குமானு பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X