Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அழைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இதை சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிக் பாஸ் அல்டிமேட் 4வது போட்டியாளர் யாரு தெரியுமா? அறிமுகப்படுத்த வந்த கோமாளியை ரசிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களை தினசரி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 4வது போட்டியாளர் யார் என்கிற அறிவிப்புடன் குக் வித் கோமாளி பிரபலம் வந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கரண்டி, துண்டு, வத்திப்பெட்டி என மூன்று க்ளூக்களை கொடுத்து அந்த போட்டியாளரை கண்டுபிடிக்க சொல்ல ரசிகர்கள் அடுத்த நொடியே கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஈகோவை தூக்கி போட்டுட்டு.. லைஃப என்ஜாய் பண்ணுங்க ... ஜாலியாக பனியில் சறுக்கி விளையாடும் சம்மு!

சினேகன், ஜூலி, வனிதா
இதுவரை 3 போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஸ்பெஷல் புரமோவுடன் வெளியான நிலையில், 4வது போட்டியாளர் குறித்த கெஸ்ஸிங் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன், இரண்டாவது போட்டியாளராக ஜூலி மற்றும் மூன்றாவது போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

4வது போட்டியாளர் யார்
இந்நிலையில், தற்போது 4வது போட்டியாளர் யார் என்பதை கண்டுபிடிக்க 3 க்ளூவுடன் சூப்பரான புரமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அந்த க்ளூவை பார்த்ததுமே ரசிகர்கள் அந்த போட்டியாளரும் வருகிறாரா? அப்போ என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமே இருக்காதே என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வேற யாரு
ஸ்பூன், துண்டு மற்றும் வத்திப்பெட்டியை பார்த்ததுமே பிக் பாஸ் தாத்தா சுரேஷ் சக்கவர்த்தி தான் அந்த 4வது போட்டியாளர் என ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர். வனிதா விஜயகுமாருக்கு சரியான போட்டியாக சுரேஷ் தாத்தா இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் அதகளம் செய்வாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த முறையும் பாதியிலேயே அனுப்பிட மாட்டாங்களே?

தீப்பட்டி எதுக்கு
க்ளூவாக துண்டை காட்டியதுமே ரசிகர்கள் சுரேஷ் தாத்தா என கெஸ் செய்து விட்டனர். ஆமாம்.. கடைசியாக அந்த தீப்பெட்டி எதுக்கு என சிலர் சந்தேகங்களை கிளப்ப அவர் தான் சரியா கொளுத்திப் போடுவாரே என ரசிகர்களே அதற்கும் கமெண்ட் பக்கத்தில் விளக்கத்தை போட்டு வருகின்றனர். வத்திக்குச்சி வனிதாவா? கொளுத்திப்போடும் சுரேஷ் தாத்தாவா? சபாஷ் சரியான போட்டி தான்.
Recommended Video

கோமாளியை ரசிக்கும் ரசிகர்கள்
முதல் போட்டியாளரை அறிவிக்க குக் வித் கோமாளி பிரபலமான புகழ் வந்திருந்த நிலையில், 4வது போட்டியாளரை அறிவிக்க 3வது சீசனிலும் கோமாளியாக தொடரும் மணிமேகலை வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தனியாக ஹார்ட்டீன்களை கமெண்ட் பக்கத்தில் போட்டு ரசித்து வருகின்றனர். மணிமேகலையே பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டால் சூப்பராக இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.