Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு!
சென்னை: கிச்சன் செட்டப்பில் கையில் லைட்டர் உடன் பத்த வைக்க போறேன் என அட்டகாசமான புரமோவுடன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.
4வது சீசனில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சுரேஷ் தாத்தா திடீரென நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனதை ரசிகர்கள் பலரும் ஏற்கவில்லை.
இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக பங்கேற்கிறார் சுரேஷ் தாத்தா.
கேக் வெட்டி கொண்டாட்டம்... அருண் விஜய் பேமிலி கொண்டாடிய நாய் பிறந்தநாள்

சுரேஷ் தாத்தா
பத்த வச்சிட்டியே பரட்டை என பிக் பாஸையே கலாய்த்த சுரேஷ் தாத்தா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 4வது போட்டியாளராக தற்போது அட்டகாசமான புரமோவுடன் அறிமுகமாகி உள்ளார். 4வது சீசனில் ரசிகர்களை எங்கே விட்டுச் சென்றாரோ.. அதே இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்டிமேட் ரெசிபி
பத்த வைக்கப் போறேன் அடுப்பை என சமையல் செய்து கொண்டே காரம், உப்பு, மைண்ட் கேம் தூக்கலா எஅ ஒரு அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் அடியெடுத்து வைக்கப் போவதாக சுரேஷ் தாத்தா இந்த அதிரடி புரமோவில் களமிறங்கி ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளார்.

ஸ்ட்ராங் போட்டியாளர்
4வது சீசனில் ஆரிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பதற்கு முன்னர் சுரேஷ் தாத்தாவுக்குத் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் சப்போர்ட் செய்தனர். கேபியை தோளில் சுமந்து சுரேஷ் தாத்தா பிசிக்கல் டாஸ்க் விளையாடியதெல்லாம் வேற லெவல். அனிதா சம்பத் உடன் இணைந்து சின்ன மச்சான் பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டத்தை எல்லாம் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட்டில் சுரேஷ் தாத்தா வருகிறார் என்றதும் ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.
Recommended Video

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வனிதா விஜயகுமார் vs சுரேஷ் தாத்தா இடையே கடும் மோதல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கூடவே நம்ம தாமரை அக்காவும் களத்தில் இறங்கினால் அனைத்து பிக் பாஸ் சீசன்களையும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் அடித்து ஓட விடும் என்பது கன்ஃபார்ம்.

5வது போட்டியாளர் அபிராமி
4வது போட்டியாளரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே 5வது போட்டியாளர் யார் என கண்டுபிடிக்க போட்டோ போட்டு க்ளூ கொடுத்தது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார். நேர்கொண்ட பார்வை என யாருமே கண்டுபிடிக்க கஷ்டப்படும் க்ளூவை கொடுத்த நிலையில், அபிராமி தான் 5வது போட்டியாளர் என ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர். வந்த வேகத்திலேயே வெளியேறப் போகிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.