twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் அல்டிமேட்டின் 6வது போட்டியாளர் யார்? ஒட்டுமொத்த வியாதிக்கும் ஒரு மாத்திரை கேட்டவரு!

    |

    சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், 6வது போட்டியாளர் யார் என ரசிகர்களை கண்டுபிடிக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் க்ளூ கொடுத்துள்ளது.

    24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 30ம் தேதி முதல் தொடங்குகிறது.

    விஜய் டிவியில் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய மெர்சிடஸ் சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. பெற்றோருடன் முதல் ரைடு போன சாக்‌ஷி அகர்வால்!புதிய மெர்சிடஸ் சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. பெற்றோருடன் முதல் ரைடு போன சாக்‌ஷி அகர்வால்!

    5 போட்டியாளர்கள் அறிமுகம்

    5 போட்டியாளர்கள் அறிமுகம்

    இதுவரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5 போட்டியாளர்களுக்கு பிரத்யேக புரமோ வெளியாகி உள்ளது. சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி என 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளப் போவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், 6வது போட்டியாளரை கண்டுபிடிக்க க்ளூ கொடுக்கப்பட்டுள்ளது.

    பாரபட்சம்

    பாரபட்சம்

    காணவில்லை என்கிற அறிவிப்புடன் அபிராமிக்கு போட்டது போலவே வெறும் ஒரு கார்டு மட்டுமே இந்த 6வது போட்டியாளருக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. சில போட்டியாளர்கள் மட்டுமே சிறப்பான போட்டியாளர்கள் சிலர் தேவையில்லாத ஆணிகள் என பிக் பாஸ் அல்டிமேட் டீமே நினைத்து பாரபட்சம் காட்டுகிறதா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    யார் அந்த போட்டியாளர்

    யார் அந்த போட்டியாளர்

    ஹீரோவுக்கு நண்பன் ஆடியன்ஸுக்கு காமெடியன்.. ஒட்டுமொத்த வியாதிக்கும் ஒரு மாத்திரை கேட்டவரு, அடிக்கடி காணாம போயிடுவாரு நடுவுல வந்து கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவாரு போன்ற கண்டே புடிக்க முடியாத க்ளூக்களை கொடுத்துள்ளனர். போஸ்ட் போட்ட அடுத்த நொடியே பெயர் மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    தாடி பாலாஜி

    தாடி பாலாஜி

    மறைந்த நடிகர் விவேக் உடன் தாடி பாலாஜி நடித்த அந்த எபிக் காமெடி காட்சி யாருக்குத் தான் தெரியாது. நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என விஜய் டிவியில் தாடி பாலாஜி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயரையும் சொல்லி உள்ள நிலையில், ரசிகர்கள் தாடி பாலாஜி தான் 6வது போட்டியாளர் என கண்டுபிடித்து விட்டனர்.

    ஓவியா புரமோ எப்போ வரும்

    ஓவியா புரமோ எப்போ வரும்

    ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா? என்பது போல ஹலோ பிக் பாஸ் அல்டிமேட் ஓனருங்களா? எப்போ சார் ஓவியா புரமோ போடுவீங்க என ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தும் போதெல்லாம் கடுப்பாகி வருகின்றனர். ஓவியா? வருகிறாரா? இல்லையா? என்பதையாவது கன்ஃபார்ம் பண்ணுங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Ultimate 6th contestant guessing card out now in Disney Plus Hotstar social media platforms. Fans correctly found Thadi Balaji is that contestant in comment section.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X