அனிதா சம்பத் முதல் வெர்ஷனே அப்படி இருந்தது.. இப்போ 2.0 வெர்ஷனாம்.. 24 மணி நேரம் ஸ்பேஸ் இருக்கே!
சென்னை: ஏற்கனவே அறிவித்தபடியே 7வது போட்டியாளர் அனிதா சம்பத் தான் என்கிற புரமோ தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
சன் டிவி செய்திவாசிப்பாளராக பிரபலமான அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ஆரியை எதிர்த்து சத்தம் போட்ட வேகத்துடனே மக்கள் அவரை எவிக்ட் பண்ணி வெளியே அனுப்பி விட்டார்கள்.
கடைசி வரைக்கும் தனக்கு ஸ்பேஸ் கிடைக்கவில்லை என புலம்பி வந்த அனிதா சம்பத்துக்கு தற்போது அல்டிமேட்டில் 24 மணி நேரமும் ஸ்பேஸ் இருக்கு என்ன கன்டென்ட் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அனிதா தான்
பின்னாடி திரும்பியடி போட்டோ போட்டாலும், அந்த கொண்டை ஸ்டைலை வைத்தே அனிதா சம்பத் தான் என ரசிகர்கள் அசால்ட்டாக கண்டு பிடித்து விட்டனர். இந்நிலையில், செய்தி அறையில் செய்தி வாசிக்கும் படியான புரமோவுடனே அனிதா சம்பத் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தாத்தாவுடன் ஆடியதை
பிக் பாஸ் சீசன் 4ல் சுரேஷ் தாத்தாவுடன் அனிதா சம்பத் போட்ட சின்ன மச்சான் குத்தாட்டத்தை பிக் பாஸ் ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்நிலையில், மீண்டும் சுரேஷ் சக்கவரத்தியுடன் இணைந்து சண்டை போடுவாரா? டான்ஸ் ஆடுவாரா? என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எனக்கான ஸ்பேஸ்
ஸ்பேஸ் இல்லை என அனிதா சம்பத் புலம்பியதை வைத்தே புரமோவை உருவாக்கி உள்ளார் பிக் பாஸ் இயக்குநர். எனக்கான ஸ்பேஸை இனி நானே உருவாக்குவேன் என வீர பெண்மணியாக புரட்சி போராளியாக களம் இறங்கும் அனிதா சம்பத்துக்கு வில்லியாக வனிதா விஜயகுமார் மாறுவாரா? என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

முதல் வெர்ஷனே முடியல
முதல் வெர்ஷனிலேயே தனது கணவர் பிரபாவின் புராணத்தை பாடிய அனிதா சம்பத்தை ஷ்ப்பா.. முடியல என சம்யுக்தா படு மொக்கை செய்திருந்தது இன்னமும் ரசிகர்கள் கண் முன்னாடி வந்து செல்லும். இந்நிலையில், வெர்ஷன் 2.0 வாக வரப் போகிறார் என்பதெல்லாம் நினைத்து பார்த்தாலே சிரிப்பாகத் தான் வருகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லையா
சின்னத்திரை நடிகையாகவோ, சினிமா வாய்ப்போ கிடைக்கும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருந்தார் அனிதா சம்பத். ஆனால், எதிர்பார்த்த வாய்ப்பு வெளியே கிடைக்காத நிலையில், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு அடியெடுத்து வைக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











