“சிம்புவை நான் அவமதிக்கவில்லை“.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அபிராமி !
சென்னை : சிம்புவை அவமதிக்கும் படி நான் எதுவும் பேசவில்லை என்று, அபிராமி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 59 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் அல்டிமேட் டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறி வரும் நிலையில், 5வது வாரத்தில் 2 வைல்டு கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் உள்ளே வந்தனர். தற்போது இந்த இருவரும் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகிவிட்டனர். அதன் பின்பு வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஆறு போட்டியாளர்கள்
நிகழ்ச்சியிலிருந்து சுஜா, தாடி பாலாஜி, வனிதா, சினேகன், அனிதா சம்பத், ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேறி விட்டனர். இப்போது நிகழ்ச்சியில் மிஞ்சி இருப்பவர்கள் தாமரை செல்வி, பாலாஜி, ஜூலி, அபிராமி, ரம்யா பாண்டியன், ஸ்ருதி , நிரூப். இதில் இந்த வாரம் 2 எவிக்ஷன் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வீட்டிற்குள் பணப்பெட்டியும் வந்துள்ளது. இதை எடுத்துக்கொண்டு யார் எடுத்துக்கொண்டு வெளியேறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

மன்னிப்பு கேட்ட அபிராமி
இந்நிலையில், நடிகை அபிராமி சிம்புவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது, அதில், இன்றைய டாஸ்கின் போது நாங்கள் சில பாயிண்ட்ஸ் எடுத்து வைத்துப் பேசினோம். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து அதை குறை கூறிக்கொண்டே வந்தனர். மேலும், சனிக்கிழமை சிம்பு சார் சொன்னதை வைத்து அவர் இப்படி சொன்னார் , அப்படி சொன்னார் என்று பேசினார்கள்.

சிம்பு மீது மரியாதை உண்டு
உடனே நான் எல்லாத்துக்கும் சிம்பு.. சிம்புனு சொல்லாதீங்கனு சொன்னேன். உண்மையில் நான் சிம்புவை அவமதிக்கும் வகையில் அப்படி பேசவில்லை. நான் பேசியது தவறாக வெளியாகி இருந்தால், சிம்புவிடமும் சரி அவருடைய ரசிகர்களிடமும் சரி நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உண்மையில் சிம்பு மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











