ஒரு காஃபிக்கா இவ்வளவு அக்கப்போரு… ஒளித்து வைத்த வனிதா.. சண்டை போட்ட அபிராமி!

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் சுடசுட ஒளிபரப்பாகி வருகிறது. " தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், தோத்த இடத்துலதான் ஜெயிக்க முடியும்" என்பதற்கேற்ப, கடந்த சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எது எதுக்கோ சண்டை நடந்து இருக்கிறது. ஆனால், நேற்றைய எபிசோடில் காஃபியால் வீட்டில் ஒரே அக்கப்போராகி கடைசியில் வனிதாவே கண்கலங்கிவிட்டார்.

சண்டை ஆரம்பம்

சண்டை ஆரம்பம்

வழக்கமாக இரண்டு ,மூன்று வாரங்கள் கழித்துத்தான் சண்டைதொடங்கும் ஆனால். சொல்லி வைத்ததுபோல சண்டை சச்சரவு என தொடங்கியுள்ளது பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் உள்ள பலரும் தங்களது முந்தைய பிக்பாஸ் அனுபவங்களையும், பிக்பாஸுக்கு பின் சந்தித்த விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

பல விமர்சனங்கள்

பல விமர்சனங்கள்

அதில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் இதில், வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எனக்கு மிகப்பெரிய தொடக்கமாக இருந்தது. இதன் பிறகு தான் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். என் மீது பல விமர்சனங்கள் வந்தன. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லாம் என்னை மேலும் வளரவைத்தது. நான் ஒரு ஸ்ட்ராங் விமன் என்றார்.

காஃபியால் வந்த சண்டை

காஃபியால் வந்த சண்டை

அடாவடி செய்வதையும், சண்டை போடுவதையும் தான் ரசிகர்கள் விரும்புவதாக நினைத்துக்கொண்ட வனிதா வந்த நாள் முதல் ஏதாவது ஒரு வகையில் கண்டன்ட் கொடுத்து வருகிறார். நேற்று, காஃபி பாட்டிலை என்னை கேட்காமல் யாரும் எடுக்கக்கூடாது என்று தனது படுக்கை அறையில் ஒளித்துவைத்துக்கொண்டார். இதுபற்றி, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இது தவறு அடுத்தவாரம் மீண்டும் காஃபி பாட்டில் வரும் என்று எவ்வளவோ சொல்லியும் வனிதா கேட்காமல், நான் தான் பிக் பாஸிடம் சண்டை போட்டு வாங்கினேன் நான் யாருக்கும் தரமாட்டேன் என்றார்.

Recommended Video

Bigg Boss Ultimate Day 2:பணமும் வேணும் TITLE-ம் வேணும் முடிவோடு வந்துள்ள Thamarai Selvi
அக்கப்போரு

அக்கப்போரு

வனிதாவின் செயலால் கடுப்பான அபிராமி, காஃபி என்பது இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானது, அதை நீங்க ஒளித்துவைப்பது சரியா? எங்களுக்கு எப்போ வேண்டுமோ அப்போ குடிப்போம் உங்களிடம் நாங்க ஏன் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று கேட்க, வனிதாவுக்கும் அபிராமிக்கும் சண்டை முட்டிக்கொண்டது. இதையடுத்து, எனக்கு காஃபி தேவையில்லை, அபிராமி நீ இவ்வளவு சீப்பா இருப்பனு நினைக்கவில்லை என்று கூறி தேவையில்லாத வார்த்தைகளை விட்டார் வனிதா. இதையடுத்து, இந்த வீட்டில் இருப்பவர்கள் எல்லாலுமே ஃபேக் என்று கூறி கண்கலங்கினார் வனிதா. அட அப்பா, ஒரு காஃபிக்கா இவ்வளவு அக்கப்போரு என்ற நினைக்கத்தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X