வனிதாவை முகத்திற்கு நேராக தட்டி கேட்ட அபிராமி...எதுக்குன்னு தெரியுமா ?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் துவங்கியதில் இருந்தே வனிதா விஜயக்குமார் தினமும் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தான் ப்ரோமோவாக இருந்து வருகிறது. ஆனால் இன்று சற்று வித்தியாசமாக வழக்கம் போல் அலப்பறையை ஆரம்பிக்கும் வனிதாவை, அபிராமி தட்டிக் கேட்டுள்ளார். இதையும், அட...இது கூட நல்லா இருக்கே என ரசிகர்கள் ரசித்துள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கி 4 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களிடமும் எரிச்சலை சம்பாதித்து விட்டார் வனிதா. ஆனால் நெகடிவ் பப்ளிசிட்டி பற்றி தனக்கு கவலை இல்லை என்றும், வனிதான்னா இப்படி தான் என புரிந்து கொண்டு மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதனால் தனக்கு எந்த கவலையும் இல்லை என வனிதாவே கூறி விட்டார்.

காஃபிக்காக வனிதா அடம்

காஃபிக்காக வனிதா அடம்

முதல் நாளே தனக்கு டீ பிடிக்காது. காஃபி தான் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அவர் பலமுறை கேட்டும் பிக்பாஸ் காஃபியும் அனுப்பாமல், பதிலும் கூறாமல் இருந்ததால் வீட்டில் மற்ற போட்டியாளர்களுக்காக அனுப்பப்பட்ட டீத்தூள், பால் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு போய் தனது இடத்தில் ஒளித்து வைத்துக் கொண்டார். டீ இல்லாமல் எல்லோரும் சாகட்டும் என்று வேறு கேமிராவிடம் கூறினார்.

இன்னும் காஃபி பிரச்சனை முடியலியா

இன்னும் காஃபி பிரச்சனை முடியலியா

இந்த பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால், இன்றைய ப்ரோமோவில் மீண்டும் காஃபி பிரச்சனையே தொடர்கிறது. லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் வென்றதால் போட்டியாளர்களுக்கு அவர்கள் கேட்ட காஃபி தூள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் ஆளாக காஃபி தூளை எடுத்துக் கொண்ட வனிதா, வழக்கமாக டீ கொடுப்பவர்களுக்கு ஒருவேளைக்கு மட்டும் காஃபி. இனி இது என்னுடைய கன்ட்ரோலில் தான் இருக்கும். இதை நான் என்னிடமே வைத்துக் கொள்கிறேன். மிச்சம் மீதி இருந்தால் நீங்கள் குடிங்கள் என அதை தனது இடத்திற்கு எடுத்துச் சென்று மறைத்து வைக்கிறார்.

வனிதாவை கேள்வி கேட்ட அபிராமி

வனிதாவை கேள்வி கேட்ட அபிராமி


வனிதா செய்த செயலால் மற்றவர்கள் ஷாக் ஆகி நிற்கையில் அபிராமி மட்டும், எங்க காஃபி பவுடர் என கேட்டு, வனிதாவிடமே சென்று சண்டை போடுகிறார். இது உங்களுக்கு மட்டுமல்ல. லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் வென்றதற்காக எல்லோருக்கும் தான் என்றார். ஆனால் வனிதாவோ, எங்க டீம் தான ஜெயிச்சது. இதை நான் வைத்திருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை என அபிராமியிடம் சண்டை போடுகிறார் வனிதா.

மிரண்டு போன போட்டியாளர்கள்

மிரண்டு போன போட்டியாளர்கள்

பிறகு கோபித்துக் கொண்ட வனிதா, இந்தா இதை நீயே வைத்துக் கொள். எனக்கு உங்க காஃபியும் வேணாம் எதுவும் வேணாம் என்று காஃபி தூள் பாட்டில்களை பெட்டில் தூக்கி வீசி விட்டு செல்கிறார். அபிராமி - வனிதாவின் சண்டையை சமாதானப்படுத்த வந்த மற்ற போட்டியாளர்கள், வனிதா செய்ததை பார்த்து மிரண்டு போயினர்.

வேறு கன்டென்டே இல்லையா

வேறு கன்டென்டே இல்லையா

இதை பார்த்த நெட்டிசன்கள், வேறு கன்டென்டே இல்லையா. இன்னுமா இந்த காஃபி பிரச்சனை ஓயவில்லை. வனிதா பிரச்சனையை ஆரம்பிக்கும் போதே நமக்கு எதுக்குடா வம்புன்னு என்பதை போல் அந்த இடத்தை விட்டு மெதுவாக நழுவுகிறாரே பாலா...அவர் தான் கரெக்ட். முதல் நாளில் இருந்தே வனிதா மட்டும் தான் காஃபி கேட்டுக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, இப்போ மட்டும் வந்து சண்டை போடுகிறார்களே என வனிதாவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X