சிம்பு ஒன்னும் கமல் கிடையாது… அவருக்கு புரியாது.. வாய்விட்டு மாட்டிக்கொண்ட அனிதா!

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு குறித்து அனிதா சம்பத் பேசியது சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக முடிந்தது. இதில், ராஜூ டைட்டில் வின்னர் ஆனார், 2வது இடத்தை பிரியங்காவும், 3வது இடத்தை பவானியும் பெற்றனர்.

பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சீசன் 1லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

சினேகன் வெளியேறினார்

சினேகன் வெளியேறினார்

இந்த நிகழ்ச்சி 45 நாட்களை எட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று சினேகன் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் நிரூப், பாலா, சதீஷ், சுரேஷ்சக்கரவர்த்தி, தாமரை, அனிதா,ரம்யா பாண்டியன், ஜூலி, அபிராமி ஆகியோர் உள்ளனர். பிக் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், விக்ரம் படப்பிடிப்பு இருப்பதாக கூறி விலகினார்.

கடுப்பான சிம்பு ரசிகர்கள்

கடுப்பான சிம்பு ரசிகர்கள்

தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கமலைப் போல சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக பலர் அவரை பாராட்டி வருகிறார். சிம்புக்காகவே பல ரசிகர்கள் வார கடைசியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சிம்பு குறித்து அனிதா பிக் பாஸ் வீட்டில் பேசி சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

சிம்புவுக்கு புரியாது

சிம்புவுக்கு புரியாது

சுருதியிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் ஹோஸ்ட் பண்ணி இருக்கார். என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து கொந்தளித்த சிம்பு ரசிகர்கள் வரும் வாரத்தில் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று அனிதாவுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X