எப்படி போட்டாலும் கண்டு பிடிச்சிடுறாங்களே? பிக் பாஸ் அல்டிமேட்டின் 7வது போட்டியாளர் யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், இப்போது தான் 7வது போட்டியாளர் யார் என கண்டுபிடிக்க கார்டு போட்டுள்ளனர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் குழுவினர்.

இதுவரை 6 போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், 7வது போட்டியாளரை கெஸ் பண்ணும் கார்டு வெளியாகி உள்ளது.

எந்தவொரு க்ளூவும் கொடுக்காத நிலையிலும் ரசிகர்கள் இவர் தான் அந்த போட்டியாளர் என நச்சென கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

7வது போட்டியாளர் யார்

7வது போட்டியாளர் யார்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி மற்றும் தாடி பாலாஜி ஆகிய 6 போட்டியாளர் கலந்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாக புரோமோ போட்டு அறிவித்துள்ளனர். நேற்று இரு போட்டியாளர்களை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் தாடி பாலாஜிக்கு மட்டுமே ஒரு நாளை செலவு செய்து விட்டனர். இந்நிலையில், 7வது போட்டியாளர் யார்? என கண்டுபிடிக்க கார்டு போட்டுள்ளனர்.

சிலருக்கு மட்டுமே புரமோ

சிலருக்கு மட்டுமே புரமோ

கெஸ்சிங் புரமோ எல்லா போட்டியாளர்களுக்கும் போடாமல் சில போட்டியாளர்களுக்கு மட்டுமே போட்டுள்ளது பாரபட்சமான செயல் என ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். ஆனால், நேரமின்மை மற்றும் அவர்களுக்கான ஷூட்டிங் எடுப்பதில் தாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் அனைவருக்கும் கெஸ்சிங் புரமோ போடமுடியாமல் போய் விட்டதாக பிக் பாஸ் அல்டிமேட் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

ஜூலிக்கு முகத்தை மறைத்தபடி கெஸ்ஸிங் போட்டோ வெளியிட்டாலும், அவரது ஐபோன் ரசிகர்களுக்கு அவர் தான் என காட்டிக் கொடுத்தது. இந்நிலையில், திரும்பியபடி இருக்கும் புகைப்படத்தை 7வது போட்டியாளருக்கு போட்டிருக்கும் நிலையில், நம்ம பிரபா பொண்டாட்டி அனிதா சம்பத் தான் என ரசிகர்கள் கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சிலர் கன்ஃப்யூஸ் ஆகிட்டாங்க

சிலர் கன்ஃப்யூஸ் ஆகிட்டாங்க

ஆனால், இந்தமுறை கண்டுபிடிக்க அவர் ஒரு செய்தி வாசிப்பவர் என எந்தவொரு க்ளூவும் கொடுக்காத நிலையில், சில ரசிகர்கள் சுருதி என கன்ஃப்யூஸ் ஆகி வருகின்றனர். ஆனால், பெருவாரியான ரசிகர்கள் அனிதா சம்பத் தான் என ஆணித்தரமாக கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் அனிதா சம்பத் புரமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதறி அழுத பிரியங்கா...இப்படி ரசிகர்களை பீல் பண்ண வைத்து விட்டாரே
மற்றவர்களுக்கு எப்போ

மற்றவர்களுக்கு எப்போ

இப்போதான் 7 பேரை அறிமுகப்படுத்தினால் மீதம் உள்ளவர்களை எப்போது அறிமுகப்படுத்துவீங்க? அவர்களுக்கு எந்தவொரு புரமோவும் இருக்காதா? என்றும் இப்போதே ஒட்டுமொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்டும் வந்து விட்டதால் எதுக்கு தேவையில்லாமல் புரமோ போட்டு வேஸ்ட் பண்றீங்க என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X