கட்டிப்பிடித்த பாலா.. ஆத்திரத்தில் கடித்த ரம்யா பாண்டியன்.. பிக் பாஸ் அல்டிமேட் அலப்பறைகள்!
சென்னை : பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சி 45 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
தினம் தினம் ஒவ்வொரு பஞ்சாயத்து, அலப்பறைகள் நடந்தாலும் பார்ப்பதற்குத்தான் யாரும் இல்லை, சிம்பு வரும் நாட்களில் மட்டும் அவரது ரசிகர்கள் அவருக்காக பார்க்கிறார்கள்.
நேற்றைய எபிசோடில்,டாஸ்கின் போது பாலா, ரம்யா பாண்டியனை கட்டிப்பிடித்ததால், ஆத்திரத்தில் பாலாவை கடித்துவிட்டார். இது தொடர்பாக நேற்று வீட்டில் ஒரே சண்டை.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் ஒரு விதமாக குஷியாகி விடுவார்கள். அதற்கு காரணம், பிரபலங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை பார்க்க மக்களுக்கு இருந்த ஆர்வம் தான். இந்தியில் தொடங்கிய பிக்பாஸ் தற்போது 15 சீசன்களை கடந்துள்ளது. அதே போல தமிழில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

கமல் தொகுத்து வழங்கினார்
ஐந்து சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியை தானே தொகுத்து வழங்குவதாக கூறினார் கமல். ஆனால் , 3 வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவிட்டு பிக் பாஸ் சீசன் 6ல் சந்திப்போம் என்று கூறிவிட்டு விலகி விட்டார்.

பிக் பாஸ் அல்டிமேட்
இதைத் தொடர்ந்து,பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வாங்கி வருகிறார். கமல்ஹாசனைப்போல நிறை குறைகளை கூறிவருவதால் பலர் சிம்புவை பாராட்டி வருகின்றனர். மேலும், சிம்புக்காகவே அவரது ரசிகர்கள் நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் ரசித்து பார்த்து வருகின்றனர்.

பாலாவை கடித்த ரம்யா
பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் முட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் 3 அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் தரும் முட்டையை போட்டியாளர் எடுத்து பாதுகாத்து வைக்க வேண்டும். இதில், பாலா டீம் வைத்திருந்த முட்டையை ரம்யா பாண்டியன் திருடி விட்டார். அவரிடமிருந்து முட்டையை எடுக்கப்போனா பாலா, ரம்யாவை பின் பக்கத்திலிருந்து கட்டிப்பிடித்தார். பாலா கட்டிப்பிடித்தலால் கடுப்பான ரம்யா பாண்டின் அவரின் கையை கடித்துவிட்டார்.

வாக்கு வாதம்
இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, நீ என்னை ஃபிசிகலா அட்டாக் பண்ண அதான் நான் கடிச்சேன் என்று கூறினார் ரம்யா, உன்னை வேற எப்படி பிடிப்பது என்று பாலா கேட்க, அப்போ என்னையும் உன்ன கட்டி பிடிக்க சொல்றியா? நீ தப்பா கட்டிபுடிச்சனு சொல்லல , திரும்ப திரும்ப அதையே சொல்லாத பாலா என்று நேற்று இருவருக்கும் குடுமிபிடி சண்டையே நடந்தது.


Click it and Unblock the Notifications











