சுரேஷ் தாத்தா வச்ச ஆப்பு… ஜூலியின் வாயாக மாறிய தாமரை… அல்டிமேட் அலப்பறைகள்!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொளுத்திப்போட்டு கன்டென்ட் கொடுத்துக்கொண்டு இருந்த சுரேஷ் தாத்தா வெளியேறி உள்ளார்.
முதல் வாரத்திலேயே அவர் வெளியேறுவார் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சுரேஷ் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
என்னத்தான் பிக் பாஸ் அல்டிமேட் 24 மணிநேரமும் ஒளிபரப்பானாலும் அதற்கு போதிய வரவேற்பு இல்லை. பிக் பாஸும் புதுசு புதுசா யோசிச்சாலும் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

அட்டகாசமான ஆரம்பம்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பம் என்னவோ அட்டகாசமாக பிரம்மாண்டமாகத்தான் இருந்தது. அதுவும் முந்தைய சீசனில் மனம் கவர்ந்த போராட்டியாளர்கள் என்பதால் அனைவரும் அல்டிமேட்டை மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து ஒருவாரம் முடிந்துள்ளது இருப்பினும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

பாலா 2.0
சுரேஷ் தாத்தா அவ்வப்போது வாய்க்கு வந்தபடி பாலாவிடம் பேசி சண்டை இழுக்கப்பார்த்தார். ஆனால்,பாலா 2.0 வெர்ஷனாக மாறி இருப்பதால், என்ன வேணும்னாலும் நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என்பது போல, அவர் இஷ்டத்திற்கு வீட்டை சுற்றி ஓடி ஒர்க் அவுட் செய்துக் கொண்டே இருக்கிறார். இதனால், அவ்வப்போது நிகழ்ச்சி போராக உள்ளது

தாமரைக்கு ஆப்பு
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் தாத்தாவும் இந்தவாரம் வெளியேறிவிட்டார். வெளியில் போன தாத்தா, தாமரைக்கு ஒரு ஆப்புவைத்துள்ளார். அது நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதாவது, சுரேஷ் சக்கரவர்த்தி தாமரைக்கு ஒரு வெடிகுண்டை பரிசாக அனுப்பி உள்ளார்.
Recommended Video

அலப்பறை
அந்த பாமை தாமரை கையில் வைத்துக்கொண்டு ஜூலியுடனே இருக்க வேண்டும், ஜூலி வாய் திறந்து எதுவும் பேசக்கூடாது. அவர் என்ன சொல்ல வேண்டுமோ அல்லது அவருக்கு என்ன வேண்டுமோ அதை தாமரையிடம் மட்டுமே சொல்ல வேண்டும் அதை கேட்டு தாமரை, அதை மற்றவர் இடத்தில் கூறுவார். மொத்தத்தில் ஜூலியின் வாயாக தாமரை மாறவேண்டும் இதுதான் தாமரைக்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்... இதைக்கேட்டதும் என்ன கொடுமை சார் இதெல்லாம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதுதான் பாஸ் பிக் பாஸ் அலப்பறைகள்.


Click it and Unblock the Notifications











