Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வனிதா எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்த பிக்பாஸ்... என்ன தெரியுமா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கண்ணீர் விட்டபடி வெளியேறி சென்றார் வனிதா. பிக்பாஸ் பலமுறை சமாதானப்படுத்தியும் வெளியே போவதில் பிடிவாதமாக இருந்த வனிதாவிற்கு பிக்பாஸ் மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார். இதனை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் முந்தைய ஐந்து சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றதுமே பெரும்பாலானவர்கள் வனிதா விஜயக்குமார் கண்டிப்பாக கலந்து கொள்வார். அவர் கலந்து கொண்டால், வீட்டில் வேற லெவலில் அனல் பறக்கும் என சொன்னார்கள். அதே போல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு, முதல் ஆளாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் வனிதா.
கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா...இது தான் காரணமா ?

வனிதாவையே அழ வைத்து விட்டார்களே
முதல் நாளில் இருந்தே தனது அதிகாரப் போக்கை அவர் கையாள துவங்கினார் வனிதா. அடுத்த காஃபிக்காக சண்டை போட்டு வீட்டையே ரெண்டாக்கினார். அப்போதே சண்டை ஆரம்பமாகி விட்டது. அதற்கு பிறகு டாஸ்க் அனைத்திலும் யாருடனாவது சண்டை போடுவது என்ற நிலையே தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பாலா-வனிதா இடையேயான மோதல் உச்சகட்டத்திற்கு சென்று, அதனால் வனிதா மனமுடைந்து அழுகும் நிலைக்கு ஆளானார். கன்ஃபஷன் ரூமில் தன்னை வீட்டிற்கு அனுப்பும் படி பிக்பாஸ் இடமே கேட்டார் வனிதா.

வனிதாவுடன் பிக்பாஸ் பேச்சுவார்த்தை
ஆனால் வழக்கம் போல் பிக்பாஸ், வனிதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். வழக்கமாக யாராவது இப்படி அழுது புலம்பினால் அவர்களுக்கு ஆறுதலும், தைரியமும், நம்பிக்கையும் கொடுத்து அனுப்புவது பிக்பாஸின் வழக்கம். போட்டியாளர்களும் பிக்பாசின் அட்வைசை ஏற்று, அமைதியாக மீண்டும் வீட்டிற்குள் சென்று, கேம்மை தொடர்வார்கள். ஆனால் வனிதா அதற்கு நேர் மாறாக நடந்து கொண்டார். முதலில் வழக்கமான பாணியில் பேசிய பிக்பாஸ், ஒரு கட்டத்தில் அக்ரீமென்ட் பற்றி பேசு மிரட்டுவதை போல் பேசினார்.

பிக்பாசிற்கே உத்தரவு போட்ட வனிதா
அதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காத வனிதா, அதை எல்லாம் வக்கீலை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்றார். பிறகு பிக்பாஸ் அல்டிமேட்டில் தான் தொடர வேண்டுமானால் வீட்டில் உள்ளவர்களிடம் பேச வேண்டும். வெளியில் நடப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்று பிக்பாசிற்கே உத்தரவு போடும் ரேஞ்சில் பேசினார் வனிதா. இவரை சமாதானப்படுத்தி, போட்டியில் தொடர வைக்க அவர் சொன்னதை எல்லாம் பிக்பாஸ் செய்வார் என வனிதா நினைத்தாரா என தெரியவில்லை.

ஷாக் கொடுத்து அனுப்பிய பிக்பாஸ்
வனிதா வெளியில் போக முடிவெடுத்து வாதம் செய்தும் 3 முறைக்குமேல் அவருக்கு வாய்ப்புக்கொடுத்த பிக்பாஸ் அவர் வெளியேறுவதில் உறுதியாக இருந்ததால் இறுதியாக வெளியேற அனுமதி அளித்தார். ஆனால் இப்படியே கன்ஃபஷன் ரூம் வழியாக வெளியே போங்கன்னு சொல்லிவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பாராத வனிதாவுக்கு பெரும் ஏமாற்றம். பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. நீங்கள் இப்படியே வெளியேறலாம், உங்கள் உடமைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ஹவுஸ்மேட்களை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வனிதா வெளியேறினார்.