பிக்பாஸ் அல்டிமேட்டில் காமகளியாட்டமா? ட்வீட் போட்டு டெலிட் செய்த நபர்.. வீட்டில் நடப்பது என்ன!

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் காமகளியாட்டம் நடப்பதாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கிய நபர் அதை உடனே டெலிட் செய்துவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு. பிக் பாஸ் முதல் சீசன் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது.

டி.ஆர்.பியில் கலக்கியது. ஜூலி, ஓவியா, சினேகன் போன்றவர்களால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமானது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து 5 சீசன்களும் வெற்றிக்கரமாக ஒளிபரப்பானது. இதையடுத்து, பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளாஸ் ஹாஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மற்ற 5 சீசன்களில் கலந்து கொண்டு வெற்றி பெறாத போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிம்பு தொகுத்து வழங்கினார்

சிம்பு தொகுத்து வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் சினேகன், பாலாஜி, வனிதா, அனிதா, ஸ்ருதி, நிரூப், அபிநய், ஷாரிக், பாலாஜி, தாமரை , சுரேஷ் சக்கரவர்த்தி என ஒரு படையே களம் இறங்கியது. இந்த நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, தாரிக், அபிநய், வனிதா ஆகியோர் வெளியேறி உள்ளார். இந்த வாரம் எவிக்ஷன் இருக்கும் என்று பார்த்த நிலையில், சிம்பு தொகுத்து வழங்கியதால் இந்தவாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. வைல்டு கார்டு மூலம் சுரேஷ் தாதா மீண்டும் வந்துள்ளார். அதேபோல கலக்கப்போது சதிஷ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்

சீக்ரெட் ரிலேஷன்ஷிப்

சீக்ரெட் ரிலேஷன்ஷிப்

இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்து வரும் நபர், தனது ட்விட்டர் பக்கத்தில், "பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் காமகளியாட்டங்கள்?" என பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில் ஏகப்பட்ட கருத்துக்கள் தாறுமாறாக வரவே போட்ட வேகத்தில் அந்த ட்விட்டை டெலிட் செய்துவிட்டார் அந்த ஆசாமி.

யாரா இருக்கும்

யாரா இருக்கும்

அந்த நபர் கொளுத்திப் போட்டது தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அதுயாரா இருக்கும் என்று ரசிகர்கள் மூளையை போட்டு கசக்கி வருகின்றனர். சமீபத்தில் நிரூப், அபிராமியின் இடுப்பை பாலா கிள்ளியதாக ஒரு செய்தி பரவியதை அடுத்து. பாலாவும் அபிராமியும் தான் இந்த வேலையை செய்து இருப்பார்களோ என்று யூகித்து வருகின்றனர்.

வரம்பு மீறும் போட்டியாளர்கள்

வரம்பு மீறும் போட்டியாளர்கள்

அதேபோல ஸ்மோக்கிங் ஏரியாவில் பாலாவும் அபிராமியும் கொஞ்சம் வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும், நிகழ்ச்சியில் அதை வெளிக்காட்டாமல் எடிட் செய்து ஒளிபரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. யாரோ ஒருவர் கொளுத்திப்போட்ட தீ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X