அபிநயத்துடன் என்ட்ரியான அபிராமி.. இனிமேதான் ஆட்டத்தை பாக்கபோறீங்க.. இனி கொல மாஸ் தான் போங்க!

சென்னை : பிக் பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காக வழக்கம்போல தொகுப்பாளராக களம் இறங்கும் கமல்ஹாசன்.

சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ்சக்கரவர்த்தி என 4 போட்டியாளர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்ட்மேட் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய சீசனில் நம் மனதில் இடம் பிடித்த போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டி உள்ளது.

பக்கா மாஸ் ப்ரோமோ

பக்கா மாஸ் ப்ரோமோ

ஒவ்வொரு ப்ரோமோவும் தரமா உள்ளது எப்படிய்யா இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க என கேட்கத்தோன்றுகிறது. குறிப்பா வனிதா விஜயகுமார் என்ட்ரி ப்ரோமோவை சொல்லலாம், குடுகுடுப்பைகாரர் ஒருவர் வீட்டுக்கு வர போற மகராசி யாரு என்று சொல்லு ஜக்கம்மா என்று கேட்க, வீட்டிலிருந்து பாத்திரம் பறந்தது பக்கா மாஸ். அதுமட்டுமில்லாமல் வந்துட்டேனு சொல்லு, சம்பவம் இனிமே தான் ஆரம்பம் என்று வனிதா கூறியது செம பஞ்ச்.

காணவில்லை… அடையாளம்

காணவில்லை… அடையாளம்

அதே போல ஐந்தாவது போட்டியாளர் யாருனு கண்டுபிடிக்கும் ப்ரமோ காலையில் வெளியானது. அதில், காணவில்லை...அடையாளம்.... மூணுல வந்தவரு, முகினோட மோதுனவரு... வீட்டிலேயும் ஆடுவாரு, மேடையிலயும் ஆடுவாரு.. கண்ணாலே பேசுவாரு நேர்கொண்ட பார்வையால் பார்ப்பாரு..யாரு? என்று கேட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அபிராமி.... அபிராமி என கண்டுபிடித்து கமெண்ட் பதிவிட்டு இருந்தனர்.

Recommended Video

BB 5 Kondattam Rehearsal | Radhe Manadhil பாடலுக்கு Dance!! Priyanka, Pavani
அபியோட ஆட்டத்தை பாருங்க

அபியோட ஆட்டத்தை பாருங்க

இதையடுத்து, தற்போது, அபிநயத்துடன் நடனமாடி வந்த அபிராமி, ஒரு ஊர்ல அபிநயமான பொண்ணு இருந்தா, ஒரு ஆட்டத்துல தோற்றுவிட்டு சோகமாக வீட்டுக்கு வந்தாலாம், இருந்தாலும் மனம் தளராமல் பயிற்சி பண்ண அவளுக்கு மறுவாய்ப்பு கிடைச்சிதாம் என்று நடனமாடிய அபிராமி கூறி, பிக் பாஸ் அல்டிமேட்டில் நடனமாடலாம் வாங்க என்ற அழைக்கிறார் பிக் பாஸ். உடனே மகிழ்ச்சியான அபிராமி இந்த அபியோட ஆட்டத்தை இனிமேத்தான் பார்க்க போறீங்க என்று கூறுகிறார். அபிராமியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்க ளை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X