வேற லெவல் மாற்றம்...கெத்தாக களமிறங்கிய பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்

சென்னை : பிக்பாஸ் 5 சீசன்களிலும் பார்த்த போட்டியாளர்களா இவர்கள் என ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவிற்கு வேற லெவல் மாற்றத்துடன் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் ஜுலி, அபிராமி, தாடி பாலாஜி, தாமரை மற்றும் பாலாஜி முருகதாஸ்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயக்குமார் தான் அதிரடி காட்டுவார் என நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்தடுத்து வந்த போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். இனி கச்சேரி கலை கட்டும். அடிதடிக்கு பஞ்சமே இருக்காது என முடிவு செய்து விட்டார்கள் ரசிகர்கள். முதல் ஆளாக வனிதா விஜயக்குமாரும், அவரைத் தொடர்ந்து நிரூப்பும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

 ஜாலியாக வந்த ஜுலி

ஜாலியாக வந்த ஜுலி

மூன்றாவது போட்டியாளராக ஜுலி வீட்டிற்குள் சென்றார். பிக்பாசிற்கு பிறகு தனது வாழ்க்கையே மாறி விட்டதாக சொன்ன ஜுலி, யாரிடமும் இன்ஃபுலியன்ஸ் ஆகாமல், நானாக விளையாடி யார் என்பதை காட்ட போகிறேன் என்றார் ஜுலி. இதற்கு முன்பும் எப்படி சமாளித்தேன் என எனக்கு தெரியாது. இப்போதும் எந்த பிளானும் இல்லை என்றார். ஜுலிக்கு கமல் வெங்காயத்தை பரிசாக கொடுத்து அனுப்பினார்.

நோ அழுமூஞ்சி அபிராமி

நோ அழுமூஞ்சி அபிராமி

நான்காவதாக நடனத்துடன் என்ட்ரி கொடுத்தார் அபிராமி. இதுவரை அழுமூஞ்சி அபிராமி, தொட்டா சினுங்கி அபிராமி என்று தான் சொல்லி வந்தார்கள். இனி தொட்டா தூள் பறக்கும் அபிராமி என அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு மாற்றத்தை என்னிடம் பார்க்கலாம். எல்லோரும் வெளியில் என்னை பார்த்து பிடிக்கும் என சொல்வது சந்தோஷமாக உள்ளது என்றார். அவருக்கு கமல் மஞ்சளை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.

 புதிய வேகத்துடன் வந்த தாமரை

புதிய வேகத்துடன் வந்த தாமரை

ஐந்தாவது போட்டியாளராக தாமரைச் செல்வி வந்தார். என்னை யாரென்றே தெரியாமல் மக்கள் 100 நாட்கள் வீட்டிற்குள் வைத்திருந்தார்கள். இப்போது நான் யார் என்பது அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சியால் எனக்கு உலகம் முழுவதும் சொந்தங்கள் கிடைத்து விட்டன. மகன் என்னிடம் பேசியது சந்தோஷமாக இருந்தது. என் முன்னுதாரணமாக எடுத்ததாக பலர் சொன்னது சந்தோஷமாக இருந்தது. வெளியில் போன பிறகு தான் தெரிந்தது, இந்த மக்களுக்காக பயங்கர வெறியுடன் விளையாட வேண்டும் என்ற வேகத்துடன் வந்துள்ளேன் என்றார். தாமரைக்கு அரிசியை பரிசாக கொடுத்து அனுப்பினார் கமல்.

காமெடியாக வந்த தாடி பாலாஜி

காமெடியாக வந்த தாடி பாலாஜி

ஆறாவது போட்டியாளராக தாடி பாலாஜி வந்தார். கடந்த முறை நிறைய குடும்ப பிரச்சனை இருந்தது. அதற்காக வந்தேன். தற்போது என் வாழ்க்கையே மொத்தமாக மாறி உள்ளது. இனி புதிய பாலாஜியாக அனைவரும் முன்னிலையிலும் இருக்க போகிறேன். பாலாஜி இருக்கும் இடத்தில் காமெடி, சந்தோஷம் இருக்கும் என அனைவரும் சொல்ல வேண்டும். கடந்த முறை கமல் சாரின் கையை பிடித்து மேடைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை இந்த முறை பெற முயற்சி செய்வேன் என்றார். தாடி பாலாஜிக்கு முருங்கைக்காய்களை பரிசாக கொடுத்தார் கமல்.

அப்கிரேட் வெர்சானான பாலாஜி

அப்கிரேட் வெர்சானான பாலாஜி

ஏழாவது போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். அதே பாலாஜி தான். ஆனால் கொஞ்சம் அப்கிரேட்டாக வந்திருக்கிறேன். இப்போது நிறைய பேருக்கு எனக்கு தெரியும். கடந்த முறை என்னிடம் நிறைய பேர் வம்பிழுந்து, பெரிய ஆள் ஆனார்கள். ஆனால் இந்த முறை அதற்கு நான் இடம் கொடுக்க போவதில்லை. இந்த முறை என்டர்டைன் பண்ண போகிறேனா, அல்லது சண்டை போட போகிறேனா என தெரியவில்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என. போறோம்...தட்டுறோம்...தூக்குறோம் என்றார் பாலாஜி. அவருக்கு கமல், கீரைக்கட்டை பரிசாக கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X