பிக் பாஸ் அல்டிமேட் : “அய்யா செம போதே“ பாடலுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த சாண்டி !
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து காரசாரமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று விஜய் டிவி தீனா, வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நிலையில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
தற்போது பாலா, நீரூப், சதீஷ், சாண்டி, ரம்யா பாண்டியன், ஜூலி, தாமரைச்செல்வி என 8 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட்
ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு நாளுக்கு நாள் பீக் அதிகமாகி கொண்டே செல்கிறது. . இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

8 போட்டியாளர்கள் வீட்டில்
14 பேருடன் தொடங்கி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது வீட்டில் 8 பேர் இருக்கிறார்கள். இதுவரை சுரேஷ் தாத்தா, சுஜா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் , அனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மற்றும் சுரேஷ் தாத்தா வாக் அவுட் செய்தனர். சுரேஷூக்கு பிக் பாஸில் நுழைய 2வது வாய்ப்பு வழங்கிய நிலையில், உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் ஷோவில் இருந்து வெளியேறினார்.

சாண்டி மாஸ் என்ட்ரி
பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட விஜய் டிவி கலக்கப்போவது யாரு தீனா வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, இன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளே வந்துள்ளார். சிம்புவின் நெருங்கிய நண்பரான சாண்டி,உள்ள வரும் போதே அய்யா செம போதை பாடலுக்கு மிரட்டலாக ஆட்டம் போட்டார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாண்டியின் வருகையால் போட்டியாளர்கள் மட்மின்றி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க வெற்றியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











