Don't Miss!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் அல்டிமேட் : பிராங் செய்த பாலா... கடுப்பான வனிதா அக்கா... ரணகளமான வீடு!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இன்றை எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், வனிதா மற்றும் பாலாவின் சண்டையால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி எந்த விதமான எடிட்டும் செய்யப்படாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் இரவு 9மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.
இளையராஜா
அழைத்து
போனேன்...
இது
ஒரு
நல்ல
சந்திப்பு...
நெகிழ்ந்த
கங்கை
அமரன்

பிக் பாஸ் அல்டிமேட்
16 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பிக் பாஸ் வீடு நேற்றிலிருந்து 80ஸ் மாணவர்களின் கல்லூரியாக மாறி உள்ளது. சைக்கிள், பேருந்து நிறுத்தம், ஆடைகள், விக்குகள், அரங்கப் பொருட்கள் அனைத்தும் தரப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கேரக்டர் ஸ்கெட்ச் கூட தரப்பட்டு விட்டது. ஆனாலும் கூட போட்டியாளர்கள் சொதப்பினார்கள். இந்த டாஸ்க்கின் போதே வனிதாவுக்கும் பாலாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டபிள் எவிக்ஷன்
இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டிலிருக்கும் டெலிபோன் மணி அடிக்க பாய்ந்து வந்து எடுத்தார் பாலா. அதில், பிக் பாஸ் வீட்டிற்கு யாரும் விளையாட வந்த மாதிரி தெரியவில்லை, இதனால் இந்த வாரம் டபிள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறுகிறார். இதை கேட்டுக்கொண்ட பாலா, வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் , நீங்களே ஒருவரை ஒருவர் கலந்து பேசி, ஒருவரை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்பலாம் என்று கூறுகிறார்.

பிராங் செய்த பாலா
இதனால், உற்சாகமான போட்டியாளர்கள், இதுதான் சரியான நேரம் என்று வீட்டில் எதிரியாக நினைக்கும் போட்டியாளரின் பெயரை கூறுகின்றனர். இதை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த பாலா, பிக் பாஸ் அப்படி சொல்லவில்லை நான் சும்மா பிராங் பண்ணேன் என்று அசால்டாக கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் செம கடுப்பாகிவிட்டனர்.

ரணகளமாக மாறிய வீடு
மற்றவர்கள் சும்மா இருக்கலாம், ஆனால் வனிதா அக்கா சும்மா இருப்பாங்களா? யாரை கேட்டு நீ பிராங் பண்ண என்று எகுற, யாரை கேட்கணும் கேப்டன் என்றால் எல்லாவற்றையும் கேட்கணுமா? இந்த வீட்டிற்கு விளையாடத்தானே வந்தீங்க இல்ல சாப்ட்டு தூங்க வந்தீங்களா ? என்று பதிலுக்கு பாலாவும் கத்த வீடே ரணகளமாக மாறியது.