இந்த வாரம் காதலில் துவங்கி.. கலகத்தில் முடிந்திருக்கிறது.. டபுள் எவிக்ஷனை உறுதி செய்த கமல்!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் சன்டே ஸ்பெஷல் வீக்கெண்ட் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகி உள்ளது.
Recommended Video
வெள்ளை நிற ஃபேஷன் டிசர்ட் அணிந்து கொண்டு செம ஹேண்ட்ஸமாக கமல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என பிக் பாஸ் ஏற்கனவே பயமுறுத்திய நிலையில், அதனை முதல் புரமோவிலே உறுதி செய்துள்ளார் கமல்.

கல்லூரி டாஸ்க்
இந்த வாரத்துக்கான லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்காக வின்டேஜ் கல்லூரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதயம் முரளி கல்லூரியில் படிக்கும் 80களை சேர்ந்த மாணவர்கள் போல போட்டியாளர்கள் உடைகளை அணிந்து கொண்டு அசத்தினர். காதல், சர்ச்சை, சண்டை என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சூடு பறந்தது.

மாஸ் காட்டிய பாலா
ரூல்ஸ் பிரேக் பண்ணாலும், டபுள் மீனிங் டயலாக் பேசினாலும், பிக் பாஸ் கேம் என்றால் அதில் பாலா தான் கிங் என ரசிகர்கள் பாலாஜி முருகதாஸை கொண்டாடி வருகின்றனர். பாலா மற்றும் வனிதாவுக்கு இடையே வெடித்த சண்டைகள் தான் இந்த வாரத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தாமரையும் தன் பங்குக்கு ஸ்கோர் செய்ய பார்த்து வருகிறார்.

கன்ஃபார்ம் பண்ண கமல்
இந்த வார தொடக்கத்திலேயே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பீதியை கிளப்பிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறி உள்ள தகவல்களும் கசிந்து விட்டன. இந்நிலையில், முதல் புரமோவில் இந்த வாரம் இருவர் வெளியேற போவது உறுதி என கமலும் கன்ஃபார்ம் செய்துள்ளார்.

காதலில் துவங்கி கலகத்தில் முடிந்தது
முதல் புரமோவில் பேசிய கமல் இந்த வாரம் காதலில் துவங்கி கல்லூரியில் கலந்து கலகத்தில் முடிந்தது என ஒட்டுமொத்த பஞ்சாயத்தையும் கையில் எடுத்து பேசப் போகிறேன் என்கிற சிக்னலை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். யாருக்கு பாராட்டு, யாருக்கு குட்டு கொடுக்கப் போகிறார் கமல் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடைசி எபிசோடா?
அடுத்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட்டை கமல் தொகுத்து வழங்க வரமாட்டார் என்கிற தகவல்கள் சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. அதுமட்டும் உண்மையாக இருந்தால், கமல் தொகுத்து வழங்கப்போகும் கடைசி பிக் பாஸ் எபிசோடு இதுதானா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











