முட்டை, மஞ்சள் குளியல்.. பொட்டுவச்சு ஷாம்பு அபிஷேகம்..புதுவரவு சதீஷை ராகிங் செய்த பிக்பாஸ் டீம்!

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு மூலம் என்ட்ரியாகி உள்ள சதீஷை ராகிங் செய்து போட்டியாளர்கள் வரவேற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா வருணி, ஷாரிக், அபிநய் மற்றும் வனிதா ஆகியோர் வெளியாகி உள்ளனர்.

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா, தாமரை, அனிதா, அபிராமி, நிரூப், ஜூலி, தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி, சதீஷ், சுரேஷ் சக்கரவர்த்தி என 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னாள் போட்டியாளர்கள்

முன்னாள் போட்டியாளர்கள்

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நோ எவிக்ஷன்

நோ எவிக்ஷன்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகியதை அடுத்து, நேற்று சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் தனித்தனியாக சந்தித்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். சிம்பு நேற்று வந்ததால் இந்த வாரம் யாரும் எவிக்டாகவில்லை. ஆனால், அடுத்த வாரம் நிச்சயம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.

ராகிங்

ராகிங்

இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அதேபோல, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து அசத்திய சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு புதுவரவாக வந்துள்ளார். அவரை சூழ்ந்து கொண்ட ஹவுஸ்மேட்ஸ் முட்டை மற்றும் புளித்த மாவை தலையில் ஊற்றியும், முகத்திற்கு மஞ்சள் பூசி, பெரிய பொட்டு வச்சு மஞ்ச தண்ணீரால் அபிஷேகம் செய்தும் ராகிங் செய்து வரவேற்றனர்.

ரசிக்க வைப்பாரா

ரசிக்க வைப்பாரா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கலாக காமெடி செய்யும் சதீஷ் இந்த வீட்டில் காமெடி செய்து ரசிக்க வைப்பாரா இல்லை, வீட்டிற்குள் நடக்கும் சண்டையில் இவரும் சிக்கிக் கொள்வாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X