நாரதர் கலகம்.. வேலையை ஆரம்பித்த தாமரை.. டென்ஷனான சுரேஷ் தாத்தா.. சண்டை இருக்கு!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் 4ம் நாள் முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிரஸ் மீட்டில் செலிபிரிட்டியாக சுரேஷ் சக்கரவர்த்தி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரான கேள்வியை தாமரை கேட்க தாத்தா கோபத்தின் உச்சிக்கே சென்று விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள ஆட்கள் பலரும் எமகாதக ஆட்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

24 மணி நேர என்டர்டெயின்மென்ட்
கடந்த ஜனவரி 30ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் 24 மணி நேரமும் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது. வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நிரூப், தாமரை, அபிராமி என கன்டென்ட்டுக்கு பஞ்சமே வைக்காத பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

4வது நாள் புரமோ
24 மணி நேரமும் பார்க்க முடியாதவர்கள் தினமும் ஒரு மணி நேரம் போடப்படுகிற பைட்ஸை பார்த்து நிகழ்ச்சியை புரிந்து கொள்ளலாம் என்கிற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காவது நாள் முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

முதல் டாஸ்க்கே சூப்பர்
5வது சீசனை போல ஆரம்பத்திலேயே கடந்து வந்த பாதை டாஸ்க்கை கொடுத்து அழுகாச்சி டிராமாவை நடத்தாமல் முதல் டாஸ்க்கே பிரஸ் மீட் டாஸ்க் கொடுத்து அதிரடியாக பிக் பாஸ் அல்டிமேட்டை ஆரம்பித்துள்ளனர். எப்படியாவது ஒடிடி பக்கம் ரசிகர்களை ஈர்த்து விட வேண்டும் என மெனக்கெட்டு வருவது தெளிவாக தெரிகிறது.

செலிபிரிட்டி தாத்தா
பிக் பாஸ் போட்டியாளர்கள் செலிபிரிட்டியாகவும், பத்திரிகையாளராகவும் மாறி மாறி செயல்பட்டு வருகின்றனர். பத்திரிகையாளராக இருந்து பற்ற வைத்த சுரேஷ் தாத்தா தற்போது செலிபிரிட்டியாக அந்த ஹாட் சீட்டில் அமர்ந்திருக்க தாமரையின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கோபம் அடைந்துள்ள புரமோ வைரலாகி வருகிறது.

நாரதர் கலகம்
எப்போதுமே கலக மூட்டுவது போல பேசுறீங்களே.. நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவாங்க.. நீங்க செய்ற கலகம் என்ன நன்மை செய்தது என தாமரை செல்வி நாக்கைப் பிடுங்குவது போல சுரேஷ் தாத்தாவிடம் கேள்வி கேட்க மனுஷன் சூடாகி விட்டார். சுரேஷ் தாத்தாவையே டென்ஷன் ஆக்கிய தானைத் தலைவி தாமரை வாழ்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

உனக்கு புரியல
கோபம் அடைந்த சுரேஷ் தாத்தா, நான் நாரதர் என என்னை சொல்லல.. பிக் பாஸைத் தான் சொன்னேன். ஆனால், உனக்கு இப்பவும் அது புரியாத மாதிரி நடிச்சு இந்த சீசன்லையும் கடைசி வரை வர பார்க்காதே என தாமரையின் கேம் பிளானை அடித்து நொறுக்கி உள்ளார். இருவருக்கும் இடையே சீக்கிரமே பயங்கர சண்டை வெடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











